சிலம்பரசன் டி.ஆர். மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் கூட்டணிக்காக எதிர்பார்த்தவர்களின் காத்திருப்பு ஒரு முடிவுக்கு வரவுள்ளது. பரபரப்பான அறிவிப்பு காணொளி மூலம் அதிர்வலைகளை உருவாக்கிய பிறகு, தற்பொழுது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.டி.ஆர்.49. முன்னோட்டக் காணொளி அக்.4ல் வெளியாகிறது. கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் தலைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளதோடு, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு , ஓர் உற்சாகமூட்டும் ஆழ்ந்த சினிமா வெளிக்கான உத்திரவாதத்தை அளித்துள்ளதோடு, இது வெற்றிமாறனின் முத்திரை குத்தப்பட்ட கதை சொல்லும் பாணியைப் பார்வையாளர்களுக்கு வழங்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.******
ப்ரோமோ வீடியோ வெளியாகவுள்ள இத்தருணத்தில், அதைப் பற்றிய எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. STR-இன் தோற்றம், படத்தின் களம் மற்றும் வெற்றிமாறன் உருவாக்கவிருக்கும் உலகம் ஆகியவற்றைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோ, ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத மிக அற்புதமான ஒரு படத்திற்கான அடித்தளத்தை உருவாக்கும் என சினிமா துறையில் உள்ள ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். சிலம்பரசன் டி.ஆரின் ஆர்ப்பரிக்கும் திரை ஆளுமையும், வெற்றிமாறனின் தீவிரமான கதை சொல்லும் பாணியுடன் இணைந்து, தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் நாடகத்தை மறுவரையறை செய்யக்கூடிய ஒரு மைல்கல் சினிமாவாக STR 49 உருவாகி வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், STR 49 இன் ப்ரோமோ வீடியோ வெளியாகவுள்ள நாளான அக்டோபர் 4-ஐத் தங்கள் நாட்காட்டியில் குறித்துக் கொள்ளுங்கள். ஒரு வெடிப்புறும் சம்பவத்திற்குத் தயாராகுங்கள்.

