கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கன்னட படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் பிரியங்கா மோகன் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் பதாகை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வைஷாக் ஜெ பிலிம்ஸ் தயாரிப்பில், ஹேமந்த் எம்.ராவ் இயக்கதில், சிவராஜ்குமார், இளம் நட்சத்திர நடிகர் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்கும் இப்படம், 70 களின் காலகட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.******
தனது அறிமுகப்படமான 2016ல் வெளியான ஒந்த் கதே ஹெல்லா Ondh Kathe Hella படத்தைத் தொடர்ந்து, நீண்ட காலமாக கன்னட படத்தில் தோன்றாமல் இருந்த பிரியங்கா மோகன் தற்போது பெரும் ஆளுமைகள் இணையும் பிரம்மாண்ட படத்தில் இணைந்துள்ளார். இதுவரை காதல், குடும்ப உணர்வுகள், கமர்ஷியல் எண்டர்டெய்னர் போன்ற கதைகளில் நடித்து வந்த பிரியங்கா மோகன், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட, வலுவான கதாபாத்திரத்தில் தோன்றவிருக்கிறார் என்பதே முக்கிய சிறப்பு.

