நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் – மிஸ்டர் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இத்திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர்ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. ராஜபாண்டி – விஷ்ணு ராமகிருஷ்ணன் – டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்ததிரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாலகுரு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஃபேமிலிஎன்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். *********
இயக்குநர் வனிதா விஜயகுமார் பேசுகையில், ”இங்கு வருகைதந்திருக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ‘ பிதா’ படத்தில் மதியழகனுடன் நடித்து வருகிறேன். அந்தப்படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் தான் பாலாவும், சதீஷும். அனைவரும் சினிமாவை நேசிப்பதால் இப்போது நாங்கள்நண்பர்களாகி விட்டோம். அம்மாவிற்கு பிறகு அம்பிகா – ஷகிலா ஆகிய இருவரை தான்அம்மாவிற்கு நிகராக பார்க்கிறேன். ஷகிலா இந்த படத்தில்நடித்திருக்கிறார். என்னை இயக்குவது அம்பிகா தான். இந்தபடம் தொடர்பான பணிகள் எதுவாக இருந்தாலும் அம்பிகாஅக்காவிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் செய்தேன். இன்றுவரை பல தருணங்களில் எனக்கு ஆதரவாக செயல்படுபவர் அம்பிகா அக்கா தான். வெளிநாட்டில் அனைவரும் ஒரே இடத்தில் தங்கிபணியாற்றினோம், இந்த அனுபவம் மறக்க முடியாதது.
வசந்தபாலனின் படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அவருடைய எழுத்துக்கும் நான் மிகப்பெரிய ரசிகை. அவர்இயக்கத்தில் வெளியான ‘அநீதி ‘ திரைப்படத்தில்நடித்திருந்தேன். அவருடைய எளிமை எனக்கு மிகவும்பிடிக்கும். அவரிடமிருந்து மனிதநேயத்தை கற்றுக் கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். அவர் அமர்ந்திருக்கும்மேடையில் நானும் இயக்குநராக அமர்ந்திருப்பதைபெருமிதமாக கருதுகிறேன். என் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. நல்ல இயக்குநர் – பெரிய இயக்குநர்- சிறந்த இயக்குநர் – எனயாராக இருந்தாலும் ஒரு படத்திற்கு அவர்தான் கேப்டன். அந்தவகையில் என் மீது நம்பிக்கை வைத்து பணியாற்றிய ஸ்ரீகாந்த்தேவாவிற்கும் நன்றி. இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின்பெயருக்கு முன் ‘ரொமான்ஸிக்கல்’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
இயக்குநர் பி. வாசு சாரிடம் ‘பொண்ணு வீட்டுக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிஇருக்கிறேன். அந்தத் தருணத்திலேயே என்னிடம் திறமைஇருக்கிறது என்று கண்டுபிடித்து பாராட்டியவர் பாத்திமா பாபுஅக்கா. அவர்களுக்கும் நன்றி. சமூக வலைதளங்களில் என்னை பற்றிய விமர்சனங்களைபடிப்பேன். ஆனால் கண்டுகொள்ள மாட்டேன். இந்தப் படத்தில் ஷகிலா பேசுவது போல் ஒரு டயலாக்இருக்கும். ‘ஒரு பொண்ணு கர்ப்பமாக இருக்கும் போதுஅம்மாவை விட புருஷன் கூட இருக்கணும் ‘ என பேசுவார். இது என்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த விஷயம். ஜோவிகாவின் தயாரிப்பில் நான் ஒரு திரைப்படத்தைஇயக்குவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஜோவிகாகதாநாயகியாக அறிமுகமாகிறார். அவர் இரண்டு படங்களில்நடிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த சுமந்த் ஆர்ட்புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம் எஸ் ராஜூஜோவிகாவை அறிமுகப்படுத்துகிறார். அந்தப் படத்திற்கானபடப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது.
வனிதாவின் குழந்தை யார் என்பதை ஜூன் மாதத்தில்திரையரங்குகளில் வருகை தந்து தெரிந்து கொள்ளுங்கள்,” என்றார்.