“வடம்” திரைப்பட விமர்சனம்

பாண்டி முனி என்ற ஜல்லிக்கட்டு காளைமாட்டை வளர்க்கிறார் விமல். இந்த காளையை விலை கொடுத்து வாங்க முயற்சி செய்கிறார் நட்டி. விமல் மறுக்க இது சண்டையாக மாறி மோதல் நட்டியின் கொலையில் முடிகிறது. இந்த கொலைக்கு பழி வாங்க வருகிறார் கதாநாயகி சங்கனா ஸ்ரீ. படத்தில் பல காட்சிகளில் சில படங்களின் பாதிப்பு இருந்தாலும் ஜல்லிக்கட்டுக்கு பின்னால் இருக்கும் மனிதர்களின் அகந்தை, காதல் போன்றவைகளை படமாக்கிய விதம் சிறப்பாக இருந்தது. ஜல்லிக்கட்டு காட்சிகள் சிறப்பாக அமைந்ததற்கு ஒளிப்பதிவும், படத் தொகுப்பும் மிக முக்கிய பங்காற்றி உள்ளன. நட்டியின் நடிப்பும், ஆடுகளம் நரேனின் நடிப்பும் மிக அமர்க்களம். முனீஸ்காந்த் சிரிப்புக்கு பதில் குணச்சித்திர காந்த் ஆக மாறி விட்டார். தனது மகள் மீது அன்பு செலுத்தும் இடத்திலும், மகள் இறந்தபின் அழும் இடத்திலும் முனீஸ் காந்த் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. ஒரு குணசித்திர நடிகர் என்று நிரூபித்து விடுகிறார். கதாநாயகி  சங்கனா காதல் காட்சிகளில் சபாஷ் போட வைக்கிறார். கதாநாயகன் விமல் எல்லா இடங்களிலும் வசனத்தை ஒரே போல் பேசுகிறார். விமல் ஒரே போன்று எல்லா படத்திலும் நடிப்பதை மாற்றி கொண்டால் விமல் சினிமா எதிர்காலத்திற்கு நல்லது. படத்தின் மிகப்பெரிய பலம் இமானின் இசை. ஜல்லிக்கட்டு பாடலில் கம்பீரமும், காதல் பாடல்களில் நெகிழ்ச்சியும் இருக்கிறது. வடம் என்பதை ஜல்லிக்கட்டு மாட்டில் சுற்றப்பட்டுள்ள கயிறை குறிக்கும். படத்தில் திரைக்கதையை இன்னும் அழுத்தமாக செய்திருக்கலாம். ஜல்லிக்கட்டுக் காளையை வில்லுவண்டியில் கட்டி பயணித்திருக்கிறார் இயக்குநர்