உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு ‘வேர்ல்ட் இண்டர்நேஷ்னல் தமிழ் பிலிம் அசோசியேஷன்ஸ் – விட்ஃபா’. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் முதல் மாநாடு, சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கங்கை அமரன், ஆர்.வி.உதயகுமார், பேர்ரசு, கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் விட்ஃபா அமைப்பின் சர்வதேச தலைவரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ரஷீம் விருந்தினர்களை வரவேற்றார். இந்நிகழ்வில் கங்கை அமரன் பேசியதாவது: “விட்ஃபா அமைப்பை பற்றி கேட்ட போது இது மிகவும் சிறப்பான அமைப்பாக இருக்கிறது. ஒரு கதையை உயிராக நினைத்து சுமப்பவர்களை தேடி பிடித்து வாய்ப்பு கொடுக்க வேண்டும், அப்படிப்பட்ட கதைகளை தயாரித்தால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம். இப்போது வருகின்ற படங்களில் வன்முறை அதிகம் இருக்கிறது. கமலே அப்படிப்பட்ட படங்களுக்கு சென்று விட்டார். அதற்கு காரணம் மக்கள் தான், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, எதை விரும்புகிறார்களோ அதை நோக்கியே படம் இயக்க தயாராகி விட்டோம். நம் வாழ்க்கையிலேயே நிறைய கதைகள் இருக்கிறது, அதை வைத்து படம் இயக்கினாலே வெற்றி பெற்று விடலாம்.*******
நான் இயக்கிய கரக்காட்டக்காரன் படத்தை பற்றி பாராட்டி பேசுகிறார்கள், தில்லானா மோகம்மாள் படத்தின் கரு தான் கரக்காட்டக்காரன், இதை நான் சொன்னால் தான் உங்களுக்கு தெரியும், இல்லை என்றால் தெரியாது. இசையும் அப்படித்தான் நீங்கள் கொண்டாடுகின்ற பல பாடல்களுக்கு வேறு ஒரு பாடல் உதாரணமாக இருக்கும். இதை காபி என்று சொல்லக்கூடாது, பாதிப்பு என்று சொல்ல வேண்டும். இங்கு யாரும் எதையும் தெரிந்துக் கொண்டு வரவில்லை, அவர்களுக்கு அமைகின்ற சூழலுக்கு ஏற்றபடி, நம் முன்னோர்கள் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும். விட்ஃபா அமைப்பின் செயல்கள் மிக சிறப்பானவையாக இருக்கிறது. நீங்கள் நல்ல கதையம் அம்சம் கொண்ட படங்களை தயாரித்தான், நாள் இளையராஜாவிடம் சொல்லி இலவசமாக இசை அமைக்க சொல்வேன், அதேபோல் நானும் இலவசமாக பாடல் எழுதி கொடுக்கிறேன், என்பதை இங்கே பதிவு செய்து கொண்டு, விட்ஃபா மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி” என்றார்.
இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், ”இசை வெளியீட்டு விழா என்று தான் நினைத்து வந்தேன், இங்கு வந்து பார்த்ததும் ஏதோ புதிய சங்கமாக இருக்குமோ என்று பயந்து விட்டேன். இருக்கிற சங்கத்துல இருப்பவர்களுக்கே இங்கு வேலை இல்லை, இது என்னட புது சங்கமா என்று பயந்துட்டேன். ஆனால், அப்படி அல்லாமல் ஒரு அமைப்பாக சினிமாவுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஒரு படைப்பாளியின் படைப்பு வெளியே வர தமிழ் சமூகத்தை ஒன்று சேர்த்தது மட்டும் இன்றி, அந்த படத்தின் டிக்கெட் விற்பனையும் இறங்கி வேலை செய்திருக்கிறார்கள். இங்கு வெற்றி பெறுவதற்உ திறமை மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்ட்டம் வேண்டும், ஆளும் கட்சியின் சப்போர்ட் வேண்டும், அது இருந்தால் தான் தியேட்டர் கிடைக்கும், படம் வெளியாகும். ஆனால், இது எதுவும் இல்லை என்றாலும், ஒரு அமைப்பை உருவாக்கி, யாருக்கும் எதிராக நிற்காமல், ஒரு நல்ல முயற்சியை விட்ஃபா மூலம் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த அமைப்பை பற்றி கேட்ட போதே, நானே சேர்ந்து விடலாமா என்று யோசித்தேன். இந்த நேரத்தில், இயக்குநர்கள் சங்க தலைவராக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், நல்ல கதையோடு வருகின்ற இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்கு விட்ஃபா அமைப்பு வாய்ப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். இயக்குநரும், தயாரிப்பாளருமான ரஷீம், தன்னுடைய வெற்றியை தொடர்ந்து அடுத்தவர்களையும் வெற்றியாளர்களாக மாற்றுவதற்காக இந்த விட்ஃபா அமைப்பை தொடங்கியிருக்கிறார். அவருடைய ஆர்வமும், முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். விட்ஃபா வெற்றிகரமாக வளர வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.