‘டாடி’ஸ் ஹோம் யாஷ்ஷின் பிறந்தநாளில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் தனது முதல் துணிச்சலான முன்னோட்டத்தின் மூலம் அவரது ராயா கதாபாத்திரம் அறிமுகமாகிறது. யாஷ் பிறந்த நாளை ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டுடன் கொண்டாடும் வகையில் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் கதாபாத்திர அறிமுக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் யஷ் நடித்துள்ள ராயா கதாபாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து கவனத்தை ஈர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த துணிச்சலான மற்றும் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளனர். ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு கொண்டாட்டமாக வெளியாகி உள்ளது.********
யாஷ் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் போது முதலில் அதன் பெண் கதாபாத்திரங்களான கியாரா அத்வானி -நயன்தாரா – ஹூமா குரேஷி- ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோரை அறிமுகப்படுத்த தேர்ந்தெடுத்தார். இந்த நடவடிக்கை படத்தின் பன்முகத்தன்மை கொண்ட கதை களத்தையும், பல நட்சத்திரங்களைக் கொண்ட குழுவின் பார்வையையும் அடிக்கோடிட்டு காட்டியது. தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு பெண்களின் மீது கவனத்தை ஈர்ப்பதன் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படம் சாதாரண பிரம்மாண்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல.. மாறாக அதன் உலகத்தை வடிவமைக்கும் ..சக்தி வாய்ந்த கதாபாத்திரங்களை சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை யஷ் உணர்த்தி இருக்கிறார்.

