யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு படைப்பாக தன்னை நிறுவி வருகிறது. அந்தப் பயணத்தில், முக்கியமான திருப்பமாக, மெலிசா என்ற கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்த் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். கம்பீரமும் அதிகாரமும் கொண்ட, அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கும் மெலிசாவாக திரையில் தோன்றுகிறார். இந்த படம், இயக்குநர் கீது மோகன்தாஸின் தனித்துவமான கற்பனை உலகில், நடிகர் யாஷுடன் ருக்மிணி வசந்த் இணைவது, முக்கியமான கூட்டணியாக அமைந்துள்ளது.******
1960-களின் இறுதிக் காலத்தை பின்னணியாகக் கொண்ட சூழலில், மெலிசா தன்னம்பிக்கையின் உருவமாக இயல்பாக நடிக்கிறார். அவளைச் சுற்றியுள்ள சத்தம், கலகலப்பும், கூட்டம், கொண்டாட்டம் என அனைத்தையும் மீறி, அவளின் கண்களில் தெரியும் கூர்மையான உறுதி நம் கவனத்தை ஈர்க்கிறது. அந்த கூட்டத்தில் கூட, அவள் முழுமையாக தன் கட்டுப்பாட்டில், சூழலை தன்னகத்தே வைத்துக்கொள்ளும் ஒரு ஆளுமை அவளின் நடையில், பார்வையில் வெளிப்படுகிறது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் கூறியதாவது:“ருக்மிணியிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவளின் அறிவாற்றல். அவள் வெறும் நடிப்ப்பை மட்டும் வெளிப்படுத்துவதில்லை, அவள் ஆழமாக சிந்திக்கிறாள். சந்தேகத்தால் அல்ல, ஆர்வத்தால் கேள்விகள் கேட்கிறாள். அது என்னையும் இயக்குநராக மேலும் ஆழமாக யோசிக்க வைக்கிறது. சில நேரங்களில் நான் சிந்தித்த விசயங்களையும் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. திரையில் உள்ள அறிவாற்றல் பெரும்பாலும் சொல்லப்படாத இடங்களில்தான் இருக்கும் என்பதை அவள் நினைவூட்டுகிறாள். காட்சிகளுக்கு இடையில், அவள் அமைதியாக தனது குறிப்பேட்டில் எழுதிக்கொண்டிருப்பதை நான் அடிக்கடி பார்க்கிறேன்—செட்டிலிருந்து கிடைக்கும் சிறு அனுபவங்கள், எண்ணங்களை பதிவு செய்கிறாள். அந்தக் கணங்களே அவளின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன. அவள் எப்போதும் தனக்கான தனி உலகத்தை கட்டியெழுப்பிக்கொண்டே இருக்கிறாள். அவளின் அணுகுமுறை மிகுந்தசிந்தனையுடையது சில நேரங்களில், அந்த அடுக்குகளான நடிப்பிற்குப் பின்னால் இருக்கும் மனதைப் புரிந்துகொள்ள, அவள் குறிப்பேட்டின் பக்கங்களைப் படிக்க முடியுமா என எனக்கு ஆசை கூட வருகிறது.”

