சென்னை பெருநகர காவல், திருவல்லிக்கேணி துணைஆணையாளர் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு(ANIU) தனிப்படையினருக்கு கிடைத்த ரகசியதகவலின்பேரில், ANIU தனிப்படையினர் மற்றும் F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, கடந்த02.04.2025 அன்று காலை, நுங்கம்பாக்கம், DPI எதிரில் உள்ளகல்லூரி சந்தில் கண்காணித்தபோது, அங்கு சந்தேகப்படும்படிநின்றிருந்த 4 நபர்களை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள்மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில்வழக்கு பதிவு செய்து, போதைப்பொருள் வைத்திருந்த எதிரிகள்1.ஶ்ரீஜித், 2.ஹரிகிருஷ்ணன், 3.ஹரிகிருஷ்ணன், 4.பெருமாள் ஆகிய 4 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம்10.05 கிராம் மெத்தம்பெட்டமைன், 4 செல்போன்கள், 1 லேப்டாப், பணம் ரூ.6,000/-, 1 டியோ இருசக்கர வாகனம் மற்றும் 12 சிரஞ்சிகள் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டுநீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் எதிரிகள் அளித்த தகவலின் பேரில் தனிப்படைபோலீசார் தீவிர விசாரணை செய்து இவ்வழக்கில்சம்பந்தப்பட்டு தலைமறைவாகயிருந்த 1.சுனீஷ், வ/32, த/பெ.ராஜன், மனகாடு அஞ்சல் திருவனந்தபுரம், கேரளா மாநிலம்2.நிகில், வ/32, த/பெ.பாலசந்திரன், அதியனூர், திருவனந்தபுரம், கேரளா மாநிலம் ஆகிய இருவரை பெங்களூருவில் தனிப்படைபோலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10.5 கிராம்மெத்தம்பெட்டமைன், 1 செல்போன் மற்றும் 1 டேப்லட் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 எதிரிகளும் விசாரணைக்குப் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்கள்.