7சி.எஸ்.எண்டர்டெய்மெண்ட் தயாரிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ருக்குமணி வசந்த், திவ்யாபிள்ளை, யோகிபாபு, ராஜ்குமார், பப்ளு, முத்துக்குமார், அவினாஷ், ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “ஏஸ்”. தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு செல்கிறார் விஜய் சேதுபதி. விமான நிலையத்தில் தன் உறவினனின் சிபாரிசில் வேலைக்கு வரும் நபருக்காக காத்திருக்கிறார் யோகிபாபு. தான் எதிர்பார்த்திருக்கும் நபர் விஜய் சேதுபதிதான் என நினைத்து, அவரை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் யோகிபாபு. மலேசியாவில் தனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாததால் யோகிபாபுவோடு செல்கிறார் விஜய் சேதுபதி. யோகிபாபுவின் எதிர் வீட்டில் குடியிருக்கும் ருக்குமணி வசந்தை பார்த்ததும் அவர் மீது காதல் கொள்கிறார் விஜய் சேதுபதி. ருக்குமணி தன் வளர்ப்பு தந்தையான பப்ளுவுக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதேபோல் யோகிபாபு ஆசைபடும் திவ்யாவின் அம்மாவின் மருத்துவ செலவுக்கும் பணம் தேவைபடுகிறது. இப்பணத்தை சம்பாதிக்க விஜய்சேதுபதியும் யோகிபாபுவும் வில்லன் அவினாஷ் நடத்தும் சூதாட்ட விடுதிக்கு சென்று சூதாடுகிறார்கள். சூதாட்டத்தில் விஜய் சேதுபதி வில்லன் அவினாஷிடம் ரூ.10 கோடிக்கு கடனாளியாகிவிடுகிறார். இந்த கடனை சமாளிக்க விஜய் சேதுபதியும் யோகிபாபுவும் ஒரு வங்கியில் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளயடிக்கப்பட்ட பணம் இந்திய மதிப்புக்கு ரூ. 40 கோடி என்று தெரிய வருகிறது. இவர்கள் இருவரையும் போலீஸ் தேடுகிறது. இந்த நேரத்தில் விஜய் சேதுபதி வாங்கிய லாட்டரி சீட்டுக்கும் ரூ.40 கோடி கிடைக்கிறது. இந்த மொத்த பணத்தையும் விஜய் சேதுபதியிடமிருந்து கொள்ளையடிக்க வில்லன்கள் அவினாஷும் பப்ளுவும் தனித்தனியாக முயற்சிக்கிறார்கள். அந்த் பணம் என்னானது?. பப்ளுவிடம் சிக்கியிருக்கும் ருக்குமணியும் அவினாஷிடம் சிக்கியிருக்கும் திவ்யாவும் மீட்கப்பட்டார்களா?. போலீசிடமிருந்து இருவரும் தப்பினார்களா? யோகிபப்ய்விடம் உறவினன் என்று பொய் சொல்லியிருக்கும் விஜய் சேதுபதி உண்மையில் யார்?. என்பதை நகைசுவையொடு சொல்லுவதுதான் மீதிக்கதை. மூன்றுவிதமான சாயல்களில் விஜய் சேதுபதியின் நடிப்பு உச்சத்தை தொட்டிருக்கிறது. படம் முழுக்க விஜய் சேதுபதியுடன் பயணித்திருக்கும் யோகிபாவுவின் நகைசுவை காட்சிகள் அவரின் ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது. பழைய யோகிபாவை திரையில் ரசிக்கலாம். விஜய் சேதுபதியின் யதார்த்தமான நடிப்பு பார்வையாளர்களை கவர்ந்த்ருக்கிறது. ருக்குமணியின் அலட்டல் நடிப்பும் திவ்யாவின் கவர்ச்சி சிரிப்பும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. வில்லத்தனத்தை காட்டுவதில் அவினாசும் பப்ளுவும் போட்டிப் போட்டு நடித்துள்ளார்கள். அவினாஷின் உடல் வில்லனுக்கு ஏற்றாற்போலமைந்திருக்கிறது. இரண்டரை மணி நேரத்தை சலிப்புத்தட்டாமல் படமாக்கியிருக்கும் இயக்குநர் ஆறுமுக குமார் பாராட்டுதலுக்குறியவர். குடும்பத்தினர்களுடன் சென்று படத்தை ரசிக்கலாம்.
“ஏஸ்”திரைப்பட விமர்சனம்
