பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரிப்பில் என்.அரவிந்தன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், விஜய் முருகன், ஜீவா சுப்பிரமணியன், பாரத் நெல்லையப்பன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “குட் டே”. நாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம் ஒர்நாள் இரவில் மதுபோதையில் மேம்பாலத்தின் மேலே நின்றுகொண்டு தனது முன்னாள் கல்லூரித்தோழி மைனா நந்தனியிடம் “நான் சாகப்போகிறேன்” என்று தொலைபேசியில் உளறிக் கொண்டிருக்கிறார். அந்த உரையாடலை மைனா நந்தினி தனது கணவர் ஆடுகளம் முருகதாசுடன் காவல் நிலையத்தில் ஒலிபெருக்கியில் போட்டு காட்டிக் கொண்டு “செத்து தொலையடா நாயே” என்று திட்டிக்கொண்டிருக்கிறார். இத்ற்கிடையில் மேம்பாலத்தில் நின்று கொண்டிருக்கிற பிரித்விராஜை காவல்த்துறை ஆய்வாளர் விஜய் முருகன் பிடித்துக் கொண்டுவந்து காவல் நிலையத்தில் வைத்து பிரம்பால் அடித்து வாங்குகிறார். இந்த நேரத்தில் ஏற்கனவே 5 வயது சிறுமியை காணவில்லை என்று ஒருவர் கொடுத்த புகாரின் காரணமாக எல்லா காவலர்களும் வெளியே செல்கிறார்கள். இந்த நேரம் பார்த்து பிரித்விராஜ் ஆய்வாளரின் மேல் சட்டையை தான் போட்டுக் கொண்டு வாக்கிங் டாக்கிங் மைக்கை எடுத்துக் கொண்டு ஆய்வாளர் வேடத்தில் தப்பித்து விடுகிறார். அந்த இரவு முழுவதும் பிரித்திவிராஜ் மதுபோதையில் பலரோடு பிரச்சினை செய்துகொண்டு கடைசியாக ஆட்டோ ஓட்டுநர் காளி வெங்கட்டோடு சண்டை போட்டு கத்திக்குத்து வாங்கி வீதியில் அனாதையாக கிடக்கிறார். இறுதியாக வேலராமமூர்த்தியிடம் வந்துசேரும் அவர் முடிவில் என்ன ஆனார்? என்பதுதான் கதை. தயாரிப்பாளரும் கதாநாயகனுமான பிரித்திவிராஜ் உண்மையிலேயே மதுகுடித்துவிட்டுத்தான் நடித்திருப்பார் போலிருக்கிறது. அப்படியொரு வித்தியாசமே தெரியாத தத்ரூபமான குடிகாரன் நடிப்பு. நிஜ குடிகாரனின் உடல்மொழியும் வாய் உளறலும் திரையில் காட்டி நடித்திருந்தார் பிரித்திவிராஜ். பிறந்தநாள் கேக்கை வாங்கிக் கொண்டு முன்னாள் கல்லூரித்தோழி மைனா நந்தினியின் வீட்டுக்கு வரும் பிரித்திவிராஜ், நந்தினியின் கணவர் ஆடுகளம் முருகதாசின் முன்னோடியே நந்தினியிடம் பேசும் உளறல் சிரிக்க மறந்தவன்கூட சிரித்துவிடுவான். இந்த காட்சியில் நந்தினியின் முகக்கொந்தளிப்பும் முருகதாசின் தவிப்பும் ரசிக்கும்படி இருந்தது. கொடுக்கும் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்துமுடிக்கும் காளி வெங்கட் இபடத்திலும் மிகச்சிறப்பாக செய்து முடித்துள்ளார். அவர் நடிப்பில் குறைவேதுமில்லை. வெட்டியானாக வரும் வேல ராமமூர்த்தி தத்துவம் பேசுவதில் அவர் ஒரு இயக்குநர் என்பதை நிரூபித்துருக்கிறார். மயான காண்டத்தின் மகிமையை முருக்கேறிய உடம்பை நிமிர்த்தி வைத்து பேசுவது அவரால்தான் முடியும். போஸ் வெங்கட்டும் பகவதி பெருமாளும் தங்களின் கதாபாத்த்ரத்தை உள்வாங்கி அருமையாக நடித்துள்ளார்கள். இரவின் நிழலை அழகாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் மதன் குணதேவ். பூர்ணா ஜெஸ் மைக்கேலின் வசனம் கைத்தட்டி வ்ரவேற்க வைக்கிறது. படத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது கோவிந்த் வசந்தாவின் இசை. படம் ஆரம்பம் முதல் முடிவுவரை சலிப்புதட்டாமல் நகைச்சுவையுடன் இயக்கியிருக்கிறார் இயக்குநர் என்.அரவிதன்
“குட் டே” திரைப்பட விமர்சனம்
