176 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது

மதுரை போதை பொருள் நுண்ணறிவு பிரிவுகாவல் ஆய்வாளர், ரா. ராஜாங்கம்  தலைமையில் கடந். 22.09.2025, மாலை இரகசியத் தகவலின்அடிப்படையில், மதுரை மாவட்டம், ஒத்தக்கடைகாவல் நிலைய     எல்லைக்குட்பட்ட  சிட்டம்பட்டி டோல்கேட் அருகே வாகன சோதனை மேற்கொண்டதில், வாகன  டாரஸ் கண்டெய்னர் லோரியில், ஆந்திராவில் இருந்துகடத்திவரப்பட்ட 176 கிலோ எடையுடைய கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும், லாரி ஒட்டி வந்த மருதுபாண்டி (வயது39), த/பெ.சேகர், ஆதிப்பட்டி கிராமம், அருப்புக்கோட்டை தாலுக்கா, விருதுநகர்மாவட்டம், என்பவரை கைது செய்து விசாரண. மேற்கொண்டதில், முதற்கட்ட விசாரணையில், மேற்படி கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கொண்டு வந்ததாக தெரியவருகிறது.  இது தொடர்பாக மதுரை போதை பொருள் நுண்ணறிவு குற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பொதுமக்கள், போதைப்பொருள் மற்றும் மனமயக்க பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான எந்தவொரு தகவலையும் 10581 என்ற கட்டணமில்லா உதவிஎண்ணிலும், 9498410581 என்ற வாட்ஸ்அப் எண்மூலமாகவும் அல்லது spnibcid@gmail.com என்றமின்னஞ்சல் மூலமாகவும் தெரியப்படுத்துமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்