சமீப காலங்களில் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இலக்கிய படைப்புகளை திரை உலகில் கொண்டு வர வெகு சிலரே துணிகிறார்கள். ஆனால் இப்போது பிரபல எழுத்தாளர் பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் நாவல் ‘ஜுகாரி கிராஸ்’ திரைப்படமாக உருவாகிறது. தனது அடுத்தப்படமான ‘கரவளி’ மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் குருதத்த கனிகா, தற்போது ‘ஜுகாரி கிராஸ்’ எனும் நாவலை படமாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாவலை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில், ராஜ் பி. ஷெட்டி இதில் கதாநாயகனாக நடிக்கிறார். புதிய காணொளி மொட்டையடித்த தலை, தெறிக்கும் இரத்தம் மற்றும் சிவப்பு இரத்தின கற்களின் காட்சிகளுடன், மிக அழுத்தமான பின்னணி இசையும் கலந்து, ரசிகர்களின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் உயர்த்தியுள்ளது.
ராஜ் பி. ஷெட்டி நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ்’
