செங்கல்பட்டு, அக்.27- அக்டோபர் 10, 2020 ஆம் ஆண்டு, கிண்டி, அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், சிறுமியின் வீட்டின் அருகில் வசித்து வந்த சாமுவேல் என்பவர் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மேற்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், கிண்டி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, பின்னர் அதிகார வரம்பு காரணமாக இந்த வழக்கு செம்மஞ்சேரி, அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. புலன் விசாரணையின் போது, குற்றவாளி சாமுவேல் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். புலன்விசாரணை துரிதமாக முடிக்கப்பட்டு மேற்படி குற்றவாளி சாமுவேல் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கானது செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை, குற்றவாளி என தீர்மானித்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் மற்றும் ரூ.1000 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால், கூடுதலாக 1 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு நிதியாக ரூபாய் ஜந்து லட்சம் வழங்கப்பட்டுள்ளது
Related Posts
