திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ துவங்கியது. நடிகர் திரு வீர், தனது சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில், சமீபத்தில் வெளியான சம்கிராந்திகி வஸ்துன்னாம் படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தினை, பரத் தர்ஷன் இயக்குகிறார். இந்தப் படத்தின் புது படப்பிடிப்பு வரும் இந்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.*****

