மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பெரம்பூர் சுரங்கப்பாதையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மேயர், சுரங்கப்பாதையில் போக்குவரத்து சீராகச் செல்லும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, வார்டு-71 பெரம்பூர் நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரை
அகற்றும் நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, ஸ்டீபன்சன் சாலையில் செங்கை சிவம் பாலத்தில் நின்று ஓட்டேரி நல்லா கால்வாயில் தங்கு தடையின்றி மழைநீர் செல்வதைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, புளியந்தோப்பு அங்காளம்மன் கோயில் தெரு மற்றும் டெமாலஸ் சாலையில் மழைநீர் அகற்றும் நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மாண்புமிகு மேயர் அவர்கள் வார்டு-74க்குட்பட்ட பகுதியில் மழையினை முன்னிட்டு மக்களுக்கு மாநகராட்சியின் சார்பில் தயாரிக்கப்பட்ட இரவு உணவினை வழங்கினார்.மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் மாநகராட்சி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.