செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது

(01.12.2025) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 280 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றது. கோரிக்கை மனுக்களில் குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா பெயர் மாற்றம், மின்சார வசதி, குடும்ப வன்முறை குறித்த மனுக்கள் வரப்பெற்றது. மேலும், கலைஞர் கனவு இல்லம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வீடுகள் வேண்டியும் அதிகளவில் மனுக்கள் வரப்பெற்றது. இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து
பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமென்று
அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர் 03 மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு 25.11.2025 அன்று நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதல் பரிசு ரூ.1000/–த்தினை 8 நபர்களுக்கும், இரண்டாம் பரிசு ரூ.500/–த்தினை 6 நபர்களுக்கும், மூன்றாம் பரிசு ரூ.250/–த்தினை 5 நபர்களுக்கும் என மொத்தம் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் தலா ரூ.14500/– மதிப்புள்ள சக்கர நாற்காலிகளை 2 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்கள். தொடர்ந்து 22 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6350/– மதிப்புள்ள தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்கள். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுந்தர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.