ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப திரைப்படம் ‘பிளாஸ்ட்’* இப்படத்தில் ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். திரையரங்குகளில் விரைவில் இப்படம் வெளியாகிறது. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழில் அறிமுகமாகிறார்.******
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுபாஷ் கே ராஜ், “அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஆக்ஷன் திரைப்படமாக இது அமைந்துள்ளது. தாய், தந்தை, மகள் ஆகியோரைக் கொண்ட அன்பான குடும்பத்திற்கும் தீமை ஒன்றையே குறிக்கோளாக கொண்ட, எதற்கும் துணிந்த ஒரு பயங்கர கும்பலுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தான் ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் மையக்கரு. எனது முதல் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருப்பதையும் அதில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களை இயக்கியதையும் மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்,” என்றார்.

