‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிப்பில் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது. மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், பெரும்பாலும் சென்னை நகரில் படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், படத்தின் முதல் பதாகையை விஜய் சேதுபதி வெளியிட்டது படத்திற்கு பெரும் கவனத்தை ஈர்த்தது. அவரது ஆதரவும் வாழ்த்துகளும், இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.******

Zinema Media and Entertainment Ltd தயாரிப்பில், தினேஷ் ராஜ் மற்றும் Creative Entertainers & Distributors G.  தனஞ்ஜெயன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். இசையை FOXn என்ற இசையமைப்பாளர் ஜோடி (பிரதீப் PJ & Wayne Pavey) அமைத்துள்ளனர். ஒளிப்பதிவை P. G. முத்தையா கவனித்துள்ள நிலையில், தேசிய விருது பெற்ற N. B. ஸ்ரீகாந்த் எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை P. மகேந்திரன் கவனித்துள்ளார். தயாரிப்பாளர்களான தினேஷ் ராஜ் மற்றும் G. தனஞ்ஜெயன் ஆகியோர் படப்பிடிப்பு முழுவதிலும் நேரடியாக ஈடுபட்டு, இயக்குநரின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப படம் சிறப்பாக உருவாகியுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பின்னணி பணிகள் (Post Production) வேகமாக நடைபெற்று வருகின்றன. Love Oh Love, 2026 கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இளைஞர்களின் உறவுகளை நவீன கோணத்தில், உணர்ச்சிப் பூர்வமாகவும், மனதைத் தொடும் வகையிலும் சொல்லும் இந்த படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. PRO: ரேகா