“சல்லியர்கள்” திரைப்படம் விமர்சனம்

தங்க முகையதீன்

கருணாஸ், கரிகாலன் தயாரிப்பில் கிட்டு இயக்கத்தில் சத்யாதேவி, கருணாஸ், திருமுருகன், ஜானகி, மகேந்திரன், நாகராஜ், பிரியா, ஆனந்த் சௌந்திரராஜன், மோகன், சந்தோஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “சல்லியர்கள்”. பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழர்களின் நாடாக இருந்த இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்,  ஆங்கிலேயர்கள் சிங்களர்களுக்கு இலங்கையை சுதந்திரமாக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். தற்பொது தனது நாட்டை மீட்க போராளிகள் உருவானார்கள். சினகளர்களுக்கு எதிராக ஒரு பகுதியை தமிழர் பிரதேசம் என்று அறிவித்து தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். போரில் காயமடைந்து கிடக்கும் தமிழர் மற்றும் சிங்கள போராளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பதுங்கு குழிகள் அமைத்து சேவை செய்பவர்கள்தான் சல்லியர்கள். இந்த பதுங்கு குழி மருத்துவமனையை அழிக்க சிங்கள ராணுவம் அதிகாலை நேரத்தில் விமானம் மார்க்கமாக குண்டுகள் வீசுகிறார்கள். இதிலிருந்து சல்லியர்கள் தபித்தார்களா? இல்லையா?. பதுங்கு குழி மருத்துவமனை குண்டு வெடுப்பிலிருந்து தப்பித்ததா? இல்லையா? என்ற ஒரு வரலாற்று சம்பவத்தை திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கிட்டு. இதில் மருத்துவ போராளியாக நடித்திருக்கும் சத்யாதேவி உணர்ச்சிபூர்வமாக நடித்து ஒரு போராளியாகவே திரையில் வாழ்ந்திருக்கிறார். போர்களத்தில் மருத்த்குவர்களின் தன்னலமற்ற சேவையை நம் கண்முன்னே நிலைநிறுத்துகிறார். மருத்துவராக நடித்திருக்கும் மகேந்திரன், தோற்றம் நடிப்பு என்று சரியாகப் பொருந்துகிறார். கருணாஸ் சிறப்பாக நடித்துள்ளார். அவர் பேசும் வசனங்கள் அனைத்தும், தமிழ் ஈழ மக்களின் உணர்வுகளாகப் படம் பார்ப்பவர் மனதில் பதியம் போடுகிறது. பதுங்குக் குழுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களின் வரலாறை தோண்டி எடுத்துள்ளார் இயக்குநர் கிட்டு.