ரிச்சர்ட், ரக்ஷனா, ஒய்.ஜி மகேந்திரன், நட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “திரௌபதி 2.”. கோயில் நிலத்தை மீட்க ரிச்சர்ட் முயற்சி எடுக்க, அதற்கு உதவும் நாயகி கோயிலுக்கு வரும்போது பல நூற்றாண்டுகளுக்கு முன்பான நினைவுகள் அவளுக்கு வருகின்றன. அதுவே படத்தின் மீதி கதை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாரதத்தில் கில்ஜி, தூக்ளக் ஆகியோரின் அராஜகத்தை சொல்கிறோம் என்ற போர்வையில் ஒரு மதப்போரை தொடங்கி இருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. கானல் நீரில் துவைத்தெடுத்த கற்பனை போர்வையை வரலாறு என்று போர்த்திக் கொண்டு ஒரு மிகப்பெரிய மதக்கலவரத்தை உண்டாக்கும் எண்ணத்தில் திரைக்கதை வடிவமைத்து படத்தை இயக்கியிருக்கிறார் மோகன் ஜி. கில்ஜி, துக்ளக் ஆகிய மன்னர்கள் இந்தியர்களை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற சொல்வது போலவும், இல்லை என்றால் அதிக வரி விதிப்பு, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது போலவும் திரைக்கதையை சித்தரித்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் மோகன் ஜி. இது பாசிச கொள்கைக்கு உடன்பட்டது போல் இருக்கிறது. ராமரை துதிக்கும் இடத்தில் மதம் மாறிய இந்து ஏன் தொப்பி அணிந்து கொண்டே இருக்கிறார்? என்பது தெரியவில்லை. அந்த இடத்தில் காவல் படைகளும் இல்லை. பிறகு ஏன் தொப்பி? அதுவும் தொப்பி போட்டுக்கொண்டே ராமரை வணங்குவது ஒரு இனக் கலவரத்தை தூண்டுவதற்காக அடிக்கோடுபோல் காட்டி இருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. மொத்தத்தில்
உலக நாடுகளில் பல மதத்தினர், உறவுகளைப் போல் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் இந்த திரவுபதி 2வை இயக்கி தன் மத வெறியை காட்டி இருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. மதுரையில் சமணர்களை கழுவில் ஏற்றியவர்கள் யார்?, அதற்கான காரணம் என்ன?, அந்த வரலாறை எடுக்க முடியுமா அவரால்? முடியாது.. ஏன் தெரியுமா ? விட்டத்தை பார்த்து எச்சில் துப்பியது போல் இருக்கும். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு.. அதற்காகத்தான் அதற்கு கேளிக்கை வரி விதிக்கிறார்கள். அந்த பொழுது போக்குக்குள் ரசிகனை மகிழ்விக்கும் திரைப்படமே வெற்றி படமாகும். அது தெரியாதவர்கள் அறியாதவர்களை பற்றி நாம் ஒன்றும் கூற முடியாது.

