இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி 2018 ஆம் ஆண்டில் ‘குயின் – படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜன கன மன’ படத்தை இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு ‘மலையாளி ஃபிரம் இந்தியா’ எனும் திரைப்படத்தையும் இயக்கினார். அழுத்தமான சமூகம் சார்ந்த கருத்துக்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் சொல்ல முடியும் என்பதையும் நிரூபித்தார். அத்துடன் இயக்குநர் டிஜோ – சமகால மலையாள திரையுலகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார்*******
பள்ளிச்சட்டம்பி அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைகிறது.மேலும் இது அவரது இயக்கத்தில் வெளியாகும் முதல் பீரியாட்டிக் ஃபிலிம் என்பதால்.புதிய வகைகளையும், சினிமாவின் பரிமாணங்களை ஆராய வேண்டும் என்ற அவரது இலக்கையும் பிரதிபலிக்கிறது.
