சினிமா பெரும் பிரச்சனையில் இருக்கிறது – ஆர்.வீ.உதயகுமார்

எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “மரகதமலை”. எல்.ஜி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், ஏப்ரல் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் போசும்போது கூறியதாவது: இப்படத்தை எழுதி இயக்கிய லதா மேடம் மிகுந்த உழைப்புடன் ஒரு அழகான படத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக மிருகங்கள், கிராபிக்ஸ் மற்றும் காட்சிகள் மிகவும் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளன. கதையின் நாயகனும் நாயகியும் சிறப்பாக நடித்துள்ளனர். ஒரு பெண்மணி இவ்வளவு சவால்களை கடந்து இந்த படத்த உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள “மரகதமலை” திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். சினிமா எப்போதும் நல்லதாகவே இருக்கும்; நல்ல படங்களை எடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள். சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது. ஆனால் அதை சங்கங்கள் தான் பேசித் தீர்க்க வேண்டும்.******

இயக்குநர் எஸ்.லதா பேசியதாவது:  இங்கு கலந்து கொண்டுள்ள பத்திரிக்கை நண்பர்களுக்கும் மேடையில் இருக்கும் அனைவருக்கும் என் வணக்கம். “மரகதமலை” படம் பழைய காலத்து ராஜா–ராணி கதைகள், மந்திரவாதிகள், மிருகங்கள் போன்ற அம்சங்களுடன் ஒரு ஃபேண்டஸி கதை ஆக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன் கடின உழைப்புடன் உருவாக்கியுள்ளோம். தடா  ஃபால்ஸில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஹீரோ மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். டான்ஸ், ஃபைட் போன்ற காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்தார். ஹீரோயினும் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார். ஜமீன்தார் மற்றும் அவரது மனைவியின் காட்சிகளும் மிகவும் அழகாக அமைந்துள்ளன. மேலும் ஜெகன், தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். கிளைமாக்ஸ் பாடல் மற்றும் நடனக் காட்சியும் மிகவும் அழகாக உருவாகியுள்ளது. குழந்தைகளும் மிகவும் இயல்பாக நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆதரவளித்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.