இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் முன்னோட்டக் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. திரையுலகில் பல சாதனைகளை படைத்த துரந்தர் படத்தின் வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. ஜஸ்கிரத் சிங் ரங்கி என்ற கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் திரும்பியுள்ளார். ஜஸ்கிரத் மற்றும் ஹம்ஸா என இரண்டு அவதாரங்களில் அவர் காட்டும் ஆக்ரோஷம் காணொளியில் அதிர வைக்கிறது. தந்திரமான மாஸ்டர் மைண்ட் அஜய் சன்யாலாக மாதவன், மிரட்டும் ஐஎஸ்ஐ மேஜர் இக்பாலாக அர்ஜுன் ராம்பால் மற்றும் எஸ்பி சௌத்ரி அஸ்லாமாக சஞ்சய் தத் ஆகியோர் தங்களது திறமையான நடிப்பால் மிரட்டியுள்ளனர்.*******
ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், பி62 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள துரந்தர் பழிவாங்கல், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. ஆதித்யா தார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த ஹை-வோல்டேஜ் ஸ்பை-ஆக்ஷன் திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தார் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். குடி பட்வா, உகாதி பண்டிகைகளை முன்னிட்டும், ரம்ஜானுக்கு முன்பாகவும், 2026 மார்ச் 19 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளை ஆக்கிரமிக்க ஆதித்யா தாரின் இந்த பிரம்மாண்ட படைப்பு தயாராகி வருகிறது. அடையாளம் தெரியாத மனிதர்களின் இந்த அதிரடி வேட்டை, 2026 மார்ச் 19 முதல் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தொடங்குகிறது.

