“மேட் இன் கொரியா” திரைப்பட விமர்சனம்

ஶ்ரீநிதி சாகர் தயாரிப்பில் ரா.கார்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன், ரிஷிகாந்த், திருநாவுக்கரசு, சென்சன் திவாஹர், ஜெயா, ரியா, சபரிஷ் ராமச்சந்திரன், ஜெபாஸ்டின் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மேட் இன் கொரியா”. பாடசாலை பருபத்தில் பிரியங்கா  தனது  பாடசாலை ஆண்டு விழாவில் கொரியா நாட்டு ராணியாக நடித்து பரிசு பெறுகிறார். அந்த நிகழ்வின் ஆசையோடு வளர்ந்து பருவ வயதை அடைந்த பிரியங்கா, கொரியா நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்கிறார். தனது கனவு வாழ்க்கை நினைவாகும் வகையில் அவர் கொரியா நாட்டுக்கு செல்கிறாள். அந்நாட்டில் அவர் என்னென்ன அனுபவங்களை பெறுகிறார் என்பதுதான் கதை. தன்னை உணர்ந்து கொள்ள தனிமை பயணம் மேற்கொள்ளும் செண்பாவின் பாத்திரத்தை அப்படியே உள்வாங்கி பிரியங்கா மோகன் அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார். கனவுகளை தாங்கிய அந்த கண்கள் அவருக்கு இயல்பிலேயே அமைந்திருக்கின்றன. கொரியாவில் கிடைக்கப்பெற்ற தாய் கிழவி பார்க் ஹைஜின் உடனான அவருடைய நேசம் அலாதியானது. தன்னைப் பற்றி பிரியங்கா கண்டு கொள்வது ஒரு புறம் இருக்க, பார்க் ஹைஜினும் தன்னை கண்டு கொள்வது நேர்த்தி.  இரு தலைமுறை பெண்களும் தங்களுக்குள் இருக்கும் வசந்தத்தை கண்டு கொள்கிறார்கள். அந்நிய தேசங்களுக்கு செல்லும்போது மொழி முக்கியத்துவம் பெறுகிறது என்றாலும் மொழியை தாண்டிய உணர்வுகள் எப்படி பயன்படுகிறது என்பதை கண்ணீரோடு நிற்கும் பிரியங்காவை கொரியா தெரு இசைக்கலைஞன் ஏ ஆர் ரகுமானின் பாடலை இசைத்து அவரை தொடர்பு படுத்திக் கொள்வதில் விளக்கி வியக்க வைக்கிறார் இயக்குனர். கொரிய படங்களை பார்த்து அதன் சுவையை உணர்ந்துவிட்ட நாம் அதன் தாக்கத்திலேயே இப்போது எல்லாம் படங்களை உருவாக்கி வருகிறோம். அதற்கு அடுத்த முயற்சியாக கொரியாவிலேயே சென்று ஒரு இந்திய படத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் கார்த்திக். அது செண்பாவின் கனவாக மட்டுமல்லாமல் அவருடைய கனவாகவும் இருக்கலாம்.  ஆக மேட் இன் கொரியாவில் கனவு மெய்ப்பட்டிருக்கிறது.