மயில்சாமி ஏ.எம்.ராஜா தயாரிப்பில் எம்.பாலு இயக்கத்தில் ராஜா மயில்சாமி, பருத்திவீரன் சரவணன், நிஷா துபே, சுரேகா, காதல் சுகுமார், ராஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “போலீஸ் பேமிலி”. விசாரணைக் கைதிகள் காவல் நிலையத்தில் மரணமடைவதிப்பற்றி திரையில் விளக்கி காட்டியிருக்கிறார் இயக்குநர் எம்.பாலு. மதுரையில் கஞ்சா விற்பனை செய்யும் சுகுமாரை காவல்த்திறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து அடித்து தாக்குகிறார்கள். இதனால் பலத்த உள்காயம் நிறைந்த சுகுமார் இறந்து விடுகிறார். அதன் பிறகுதான் இறந்து போனது அரசியல் பின்பலமிக்க ரவுடி சரவணனின் மகன் என்று காவல்த்துரையினருக்கு தெரியவருகிறது. இதனால் பயந்துபோன காவலர்கள் பிணத்தை யாருக்கும் தெரியாமல் சாலையோரத்தில் கிடத்தி வைத்துவிட்டு வந்து விடுகிறார்கள். தன் மக்னைக்கொன்ற அந்த காவலர்களை கொலை செய்ய ரவுடி சரவணன் முடிவெடுக்கிறார். முடிவெடுத்தபடி ரவுடி சரவணன் காவலர்களை தண்டித்தாரா? இல்லையா?. அவரிடமிருந்து காவலர்கள் தப்பித்தாரார்களா? இல்லையா? என்பதுதான் கதை. நகைச்சுவை நடிகரான காதல் சுகுமாருக்கு இப்படத்தில் நகைச்சுவைக்கு இடமளிக்காமல் அவரை வேரொரு கோணத்தில் இயக்குநர் பரிமாணிக்கச் செய்திருப்பது சிறப்பு. குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஜொலித்த சரவணனின் முகத்தை, இப்படத்தில் கொடூரமான வில்லத்தன முகமாக இயக்குநர் மாற்றியிருந்தாலும், எப்படியும் என்னால் நடிக்க முடியும் என்று சரவணன் பறைசாற்றியிருக்கிறார். இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் வேடமெற்று நடித்திருந்த ராஜா மலைச்சாமி, நிஷா துபே, சுரேகா ஆர், ரோஜன் லியோன், ரத்னம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா உள்ளிட்ட அத்தனை நடிகர்களும் குறைவின்றி நிறைவாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்கள். படத்திற்கு பக்கபலமாக ஜெயகுமார் தங்கவேலின் ஒளிப்பதிவும், ஜெயா கே. தாசின் இசையும் முட்டுக் கொடுத்துள்ளது. காக்கிச்சட்டையில் படிந்திருக்கும் அழுக்குக் கறையை, தெளிவாக பிரித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் எம்.பாலு.
“போலீஸ் பேமிலி” திரைப்பட விமர்சனம்
