ஏ.எஸ்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் பதாகையை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வணிக ரீதியிலான சினிமாத்தனம் இன்றி, சமூகத்தின் எதார்த்தமான பக்கங்களை திரையில் பிரதிபலிக்கும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் பதாகை அதன் அடர்த்தியான காட்சியமைப்பிற்காக ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் இப்படத்தில் ஜனனி கதாநாயகியாக நடிக்க, சிங்கம்புலி, மதுமிதா, ரமா, முனார் ரமேஷ், முருகதாஸ், வந்தனா, ஃபெரோஸ் கான், சுகன்யா, கௌசல்யா , சித்தார்த் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.*******
தொழில்நுட்பக் குழு: எழுத்து – இயக்கம் – தயாரிப்பு: ஏ.எஸ். ரவிச்சந்திரன். ஒளிப்பதிவு (DOP): தேவசூர்யா கே. இசை (Music): சதீஷ் எஸ். படத்தொகுப்பு (Editor): ஜி. ரஞ்சித் குமார். சண்டைக் காட்சிகள் (Stunt): இடிமின்னல் இளங்கோ. உடை வடிவமைப்பு: லட்சுமிநாராயணன். பாடல்வரிகள்: சதீஷ் எஸ். மேக்கப்: மணி. சிஜி (CG): பிரபா. ஒலி வடிவமைப்பு: சதீஷ் எஸ். ஸ்டில்ஸ் & பப்ளிசிட்டி டிசைன்: வேலு தயாரிப்பு நிறுவனம்: ஏ.எஸ்.ஆர். பிலிம்ஸ் (ASR FILMS) மக்கள் தொடர்பு (PRO): திரு

