பிரசாந்த் பாண்டியராஜ், பி.விஷால், பி.ஆதேஷ்வர் ஆகியோரின் தயாரிப்பில், விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில், பிரசாந்த் பாண்டியராஜ், பாலாஜி சக்திவேல், காலி வெங்கட். அருள்தாஸ், வையாபுரி, நம்ரிதா, அருள் ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா, பஞ்சமி ஆகியோரின் நடிப்பில் வெளிசந்த்ஜிருக்கும் படம் “வாரண்ட்”. திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் கடைநிலை காவலராக பணியில் சேருகிறார் பிராந்த் பாண்டியராஜ். கள்ளமில்லாத வெள்ளேந்தி குணத்தால் காவல் நிலையத்திலுள்ள மற்ற காவலர்கள் பாண்டியராஜை பட்டப் பெயர் வைத்து கேலி செய்கிறார்கள். காவல்நிலையத்தின் கழிப்பறையைகூட சுத்தம் செய்யச் சொல்கிறார்கள். இப்படி அவமானப்படுத்தப்படும் கடைநிலை காவலர் பாண்டியராஜ், ஒருகாலக் கட்டத்துக்குப் பிறகு அனைத்து காவலர்களும் பாராட்டும்படியான செய்ல்களை செய்கிறார். இந்நிலையில் பாண்டியாஜின் அதிதீவிர நடவடிக்கையால் ஒரு சிறைக்கைதி காவல்நிலையத்தில் இறந்துவிடுகிறார். இந்த குற்றத்திலிருந்து பாண்டியராஜ் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் கதை. தற்காலத்தில் காவல்நிலையம் எப்படி செயல்படுகிறது என்பதை அப்படியே தத்ரூமாக படம்பிடித்து காட்டியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் நடராஜன். விசாரணைக் கைதி மரணம். அந்த குற்றத்தில் சிக்கிக்கொள்ளாமல் மற்ற காவலர்கள் எப்படியெல்லாம் சட்டத்திலிருந்து தப்பித்துகொள்ள முயற்சி செய்கிறார்கள் என்பதையெல்லாம் ஒழிவுமறைவு இல்லாமல் திரையில் காணலாம். சம்பந்தபட்ட பாண்டியராஜ் காவலருக்காக, மற்ற காவலர்கள் சட்டத்துக்கு புறம்பாக சாட்சிகளை கட்டமைப்பது முதல் நீதிமன்றத்தில் வழக்காடுவதுவரை ஒவ்வொரு காட்சிகளும் விறுவிறுப்பாக செல்கிறது. படத்தின் முன்பகுதியில் காவலர் பாண்டியராஜ் நீதிமன்றத்தில் நீதிபதிக்கு முன் வெகுளித்தனமான நடிப்பால் அரங்கை சிரிப்பலையில் அதிர வைக்கிறார். நீதிபதியாக நடித்திருக்கும் நடிகை பஞ்சமி, ஒரு கட்டத்தில் நடிப்பு என்பதையும் மறந்து சிரித்துவிடுகிறார். அவ்வளவு தத்ரூபாக நடித்திருக்கிறார் பாண்டியராஜ். படத்தின் முன்பாதியில் நடித்திருக்கும் பாண்டியராஜின் அப்பாவித்தனமான நடிப்புக்கும், பின்பாதியில் நடித்திருக்கும் வில்லத்தன நடிப்புக்கும், சட்டத்துக்கு முன் அஞ்சுபவராக நடித்திருக்கும் உச்சக்கட்ட காட்சி நடிப்பிலும் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை கொடுத்து கைத்தட்டலை பெறுகிறார். முடிவில் சட்டத்துக்கு பயப்படுவதைவிட மனசாட்சிக்கு பயந்து நடிக்கும் நடிப்பு அபாரமாக உள்ளத்து. காவல்த்துறை ஆய்வாளராக வரும் அருள்தாஸ் மெச்சத்தகுந்த நடிப்பை கொடுத்துள்ளார். இதில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் தங்களின் கதாபாத்த்கிரத்தை உள்வாங்கி அருமையாக நடித்திருக்கிறார்கள். இப்படம் ஜீ5 இணைய தளத்தில் வெளிவந்துள்ளது
“வாரண்ட்” திரைப்பட விமர்சனம்
