என்.ஐ.கே. ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர் ‘நாக பந்தம்’ படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் உலக தரம் வாய்ந்த தொழில்நுட்ப தரத்துடன் உருவாக்கப்படுகிறது.விராட் கர்ணா நடிக்கிறார். அவருடன் நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு , மகேஷ் மஞ்சரேக்கர், ரிஷப் சாவ்னி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் புராண சாகச வகையிலான படைப்புகளின் எல்லையை மறு வரையறை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.********
மிகவும் எதிர்பார்க்கப்படும் புராண அதிரடி சாகச படைப்பான நாக பந்தம் திரைப்படம்- திரை அரங்குகளில் வெளியாக இன்னும் 44 நாட்களே மீதமுள்ளன. அதனால் இப்படத்திற்கான கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது. இந்தத் திரைப்படம் உலகெங்கிலும் எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம் தேதியன்று வெளியாகிறது.

