கிட்டு இயக்கத்தில் இசக்கி கார்வண்ணன், அபி நட்சத்திரா, காதல் சுகுமார், சௌந்தர், செல்வகுமார், பரவீன் பழனிச்சாமி, கரண் சக்ரவர்த்தி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஆட்டி”. 1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் குற்றவாளிகளை விசாரணையின்றி சுட்டுக்கொல்லும் காவல்த்துறை ஆய்வாளராக வரும் இசக்கி கார்வண்ணனை, எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத காவல் நிலையமிருக்கும் மலைக்காட்டுப் பகுதிக்கு மாற்றுகிறார்கள். அம்மலையின மக்களில் படித்க்திருக்கும் ஒரே பெண் அபி நட்சத்திர. மட்டுமே. குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்க தென்னங்கீற்று கொட்டகையில் ஒரு பாடசாலையை நடத்தி வருகிறாள். அரசு ஒருநாள் அப்பாடசாலைக்கு அரசாங்க ஆசிரியராக பரவீன் பழனிச்சாமி வருகிறார். ஆனால் அவர் சில நாட்களிலேயே கொலை செய்யப்படுகிறார். அந்த கொலைக்காரனை கண்டுபிடிக்க ஆய்வாளார் இசக்கிசரவணன் துப்பறிவு செய்துகொண்டிருக்குபோதே அடுத்தடுத்து பல கொலைகள் நடக்கின்றன. ஏன் கொலை செய்யப்படுகிறார்கள்?. கொலைகாரர்கள் யார்? கொலைகாரர்களை இசக்கி கார்வண்ணன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் கதை. ஆய்வாளராக வரும் கார்வண்ணன் ஒரே மாதிரியான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவரின் அமைதியான அலட்டிக் கொள்ளாத நடிப்பில் திர்நிக்கதை பயணிக்கிறது. காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான அமைதியான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் கதையின் நாயகனாக இருந்தாலும், அவருக்கான காட்சிகளும் நடிப்பை வெளிப்படுத்தும் தருணங்களும் குறைவாக இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. அபி நட்சத்திரா படத்தில் தெரிந்த முகமாக கவனம் ஈர்க்கிறார். அவரது அறிமுக காட்சிகள் மற்றும் கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் கதையின் முக்கியமான திருப்பங்களில் அவரது கதாபாத்திரம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாமல் போவது படத்தின் பலவீனமாக மாறுகிறது. கொலையாகும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் பழனிசாமி குறைந்த காட்சிகளில் வந்தாலும் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். மறைந்த செல்வகுமார் காவல்துறை அதிகாரியாக வந்து ரசிக்க வைக்கிறார். காதல் சுகுமார் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் பெரிதாக எடுபடவில்லை. மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறார்கள்.1970-களில் ஒரு மலைவாழ் கிராமத்தை பின்னணியாக வைத்து உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கிட்டு. பெண்களுக்கு எதிரான அநீதிகள், அதை எதிர்த்து போராடும் பெண்களின் சக்தி, ஒரு மர்ம கொலை மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் ரகசியங்கள் ஆகியவற்றை சொல்லி இருக்கிறார். சில இடங்களில் சுவாரஸ்யமாக நகரும் திரைக்கதை, பல இடங்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. படத்தின் முதல் பாதி முழுவதும் மர்மம் நிறைந்த சூழல் உருவாக்கப்பட்டாலும், திரைக்கதை மெதுவாக நகர்வது பொறுமையை சோதிக்கிறது. இரண்டாம் பாதியிலும் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் போகிறது. குறிப்பாக உச்சக்கட்ட காட்சியில் முக்கியமான விஷயங்களுக்கு விளக்கம் கொடுக்காமல் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டத்துடன் முடித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஒளிப்பதிவாளர் சிபி, மலைப்பகுதியின் இயற்கை அழகை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் தீசனின் பின்னணி இசை சில இடங்களில் கதைக்கு உதவினாலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கொலை செய்வது யார் என்பதை உச்சக்கட்ட காட்சியில் காட்டியிருப்பது கைத்தட்டலை பெறுகிறது.பெண்களுக்கு எதிரான குற்றங்களை களையெடுக்க பெண்களே முன்வர வேண்டுமென்பதை இயக்குநர் சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குறியது.
“ஆட்டி” திரைப்பட விமர்சனம்
