“மக்கள் தலைவா” திரைப்பட விமர்சனம்

கவிதாலயா சரவணன் தயாரிப்பில் ராம்தேவ் இயக்கத்தில் ரவி மரியா, அக்‌ஷயா விஜய், ராதாரவி, பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு, இயக்குநர் பேரரசு, அக்னி எஸ்.வருண், பயில்வான் ரங்கநாதன், இயக்குநர் ரங்கநாதன் ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “மக்கள் தலைவா”. இப்படம் தற்கால. அரசியலை அம்பலப்படுத்துகிற ஒரு நகைச்சுவை படம். ரவிமரியா எந்தவொரு வேலைக்கும் செல்லாமல் பொதுமக்களின் சின்ன சின்ன பிரச்சன்னைகளுக்காக போராட்டங்கள் நடத்தி அதை வலையொளியில் (யூடியூப்) பதிவேற்றம் செய்து ஊர்மக்களின் ஆதர்வை வெகுவாக பெறுகிறார். இதை அறிந்த தொழில் அதிபர் ராதாரவி ரவிமரியாவை ஒரு நடிகராக மாற்றுகிறார். இதனால் ரவிமரியாவுக்கு ரசிகர்களின் அமோக ஆதர்வு கிடைக்கிறது. இந்த ரசிகர் பட்டாளத்தை ஓட்டாக மாற்றவேண்டும் என்ற எண்னத்தில் ராதாரவி ரவிமரியாவை சந்தித்து “நீ ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நில் உன்னை இந்த நாட்டின் முதலமைச்சராக அரியாசனத்தில் அமர வைக்கிறேன்” என்று தேர்தலுக்கான அனைத்து செலவுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறுகிறார். ரவிமரியாவும் ராதாரவியின் ஆலோசனைப்படி நடிகராகி அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் 164 இடங்களை பிடித்து ரவிமரியா வெற்றியும் பெறுகிறார். ஆனால் அவ்ர் முதலமைச்சராக பதவி ஏற்கவில்லை? ஏன் ரவிமரியா முதல் அமைச்சராக பதவி ஏற்கவீல்லை? எனதுதான் கதை. நகைச்சுவை மற்றும் வில்லன்

நடிகராக திரைவானில. வலம்வந்த ரவிமரியா இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். கதாநாயகனாக பரிணாம வளர்ச்சி பெற்றாலும் நகைச்சுவை உணர்வு அவரைவிட்டு நீங்கவில்லை. படமுழுக்க நகைச்சுவை கதாநாயகனாக அசத்தியிருக்கிறார். இனி கதையின் நாயகனாக வலம்வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. தொழில் அதிபரான ராதாரவியின் அரசியல் சூழ்ச்சிகளை கையாளும் காட்சியிலும், தொழில் அதிபர்கள்தான் ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றி அமைக்கிறார்கள் என்பதை ராதாரவியின் கதாபாத்திரத்தின் மூலம் இயக்குநர் ராம்தேவ் அழகாக சொல்லியிருக்கிறார். கஞ்சா கருப்பு, ரவி மரியாவின் நண்பராக வந்து தன் பாணியில் பேசி நீண்ட நாட்களுக்கு பிறகு தனது முத்திரை நடிப்பை வெளியிட்டிருக்கிறார். அதேபோல் ரவி மரியாவின் நண்பராக வரும் அக்னி எஸ் வருண் புதுமுகமாக அறிமுகமாகியிருந்தாலும் தாக்குப் பிடித்திருக்கிறார். படத்தை கவிதாலயா சரவணன் தயாரித்திருப்பதுடன் அரசியல்வாதியாகவும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். துளசி ராமனின் இசையும்

கார்த்திக் எஸ் நாயரின் ஒளிப்பதிவும் படத்தின் ஒட்டத்துக்கு பெரிதும் உதவியிருக்கிறது. தற்கால அரசியல் எது என்பதை இயக்குநர் ராம்தேவ் நாட்டு மக்களுக்கு வெள்ளித்திரையில் பாடம் படத்திதுள்ளார். பழ்.கருப்பையாவின் அரசியல் தெளிவும் நாஞ்சில் சம்பத்தின் அரசியல் சிந்தனையும் திரையில் கொட்டிக்கிடகிறது.