ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள “திரிஷ்யம் 3” திரைப்படம் ஜூன் 18 முதல் பிரைம் இணையதளத்க்தில் வெளியாகியது. இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் ஆசிர்வத் சினிமாஸ் நிறுவனம் மூலம் உருவாகியுள்ளது. மோகன்லால், மீனா மற்றும் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த கால தவறுகள் மீண்டும் உயிர்ப்பெற்று ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் சூழலில், தனது குடும்பத்தை காப்பாற்றும் பாதுகாவலனாக ஜார்ஜ்குட்டி மீண்டும் களமிறங்குகிறார். இந்தியாவிலும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள், த்ரிஷ்யம் 3 திரைப்படத்தை மலையாளம், மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுடன், ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக காணலாம்.
“திரிஷ்யம் 3” திரைப்படம் ஜூன் 18 முதல் பிரைம் தளத்தில் வெளியாகியது
