“அனந்தன் காடு” திரைபட விமரானம்

எஸ்.வினோத் குமார் தயாரிப்பில், ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்யா, நிகிலா விமல், ரெஜினா ஹாஸ்சந்திரா, சுனில், இந்திரன்ஸ், சித்திக், அஜய், போஸ் வெங்கட், தேவ் மோகன், ரஞ்சி பணிக்கர், அஞ்சலி பி நாயர், சாந்தி பாலச்சந்திரன், விஜயராகவன், சாகர் சூர்யா, அஜின் பென்னி, சரத் அப்பானி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “அனந்தன் காடு”.

இலங்கையில் இனப்படுகொலை நடந்த காலகட்டத்தில் படம் ஆரம்பிக்கிறது. சிங்களப்படையினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த தமிழினப் போராளிகளின் தலைவன் இருக்குமிடைத்தை கேட்டு சிங்களப்படை அதிகாரி பல தமிழர்களை நிற்க வைத்து சுடுகிறான் இளம்பெண்களை கற்பழித்து கொலை செய்கிறான். இந்த கொடூர கொலையில் ஆர்யாவின் தாய், தந்தை, சகோதரி எல்லோரும் கொல்லப்படுகிறார்கள்.

பதுங்கிப்பாயும் வேங்கையான ஆர்யா,  தற்போது பதுங்கும் இடமாக தமிழ்நாட்டுக்கு கள்ளத்தோணியில் வருகிறார். தமிழகத்திலிருக்கும் இனவிடுதலைப் போராளியான போஸ் வெங்கட்டின் ஆலோசணையின் பேரில்,  முதலமைச்சரின் அடியாளான இந்திரன்ஸிடம் வேலைக்கு சேருகிறார் ஆர்யா. அவர் தமிழகத்துக்கு வர என்ன காரணம்? திரும்பவும் ஆர்யா இலங்கைக்கு சென்றாரா? இல்லையா?. என்பதுதான் கதை.

இப்படத்தில் ஆர்யாவின் பங்கு மிக முக்கியமானது. எதிரிகளிடம் அடிவாங்கி அமைதி காக்கும் காட்சியிலும் பின்பு வேங்கையாக எதிரிகளின் மீது பாய்ந்து அவர்களை பந்தாடும் காட்சியிலும் ரசிகர்களின் கைத்தட்டலை வெகுவாக பெறுகிறார். இனப்போராளிகளின் வேதனையை தன் உள்ளத்திலும் உடலிலும் தாங்கி, மௌன மொழியால் உணர்வுகளை கொட்டித்தீர்க்கிறார் ஆர்யா. அடியாட்களின் தலைவராக நடித்திருக்கின்ற இந்திரன்ஸின் உச்சக்கட்ட காட்சியில் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார்.

கல்லிலிருந்துதான் நீர் சுரக்கிறது என்பதை இந்திரனனின் உச்சக்கட்ட காட்சி தெளிவாக்குகிறது. காவல்த்துறையின் உயர் அதிகாரியாக வரும் சுனில் வில்லத்தனத்தின் பொத்த உருவமாக காட்சித்தருகிறார். அடுத்தவரின் மனைவியை ராட்சசத்தனமாக அனுபவித்து அவளது மார்பகத்தில் சூடு வைக்கும்போது அவளின் கதறல் சத்தத்தை கேட்டு இன்பமுறும் ராட்சசனாகவே திரையில் வாழ்ந்திருக்கிறார். வில்லத்தனத்தின் விளிம்புவரை சென்று நடித்திருக்கிறார சுனில்.

நிகிலா விமல், ரெஜினா ஹாஸ்சந்திரா, சித்திக், அஜய், போஸ் வெங்கட், தேவ் மோகன், ரஞ்சி பணிக்கர், அஞ்சலி பி நாயர், சாந்தி பாலச்சந்திரன், விஜயராகவன், சாகர் சூர்யா, அஜின் பென்னி, சரத் அப்பானி ஆகியோர்கள் தங்களின் கதாபாத்திரைத்தின் தன்மையை உள்வாங்கி திரையில் வாழ்ந்திருக்கிறார்கள். யுவாவின் ஒளிப்பதிவு பார்வையாளர்களை திரைக்குள் இழுத்துச் செல்கிறது. கதைக்களத்துக்குள்லிருந்து தனது இசைக்கருவிகளை வாசித்திருக்கிறார் இசையமைப்பாளர் அஜநீஸ்லோக்நாத். தடம் புரளாத பாதையில் கதையை பயணிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ரோஹித் வி.எஸ்.வரியாத்.  இலங்கை இனப்போராளிகளின் வாழ்வியல் துயரங்களையும்,  குழையாத கொள்கைப்பிடிபையும் திரையில் கண்ணீர் ஓவியமாக வரைந்திருக்கிறார் இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார்.