தமிழ் சினிமாவின் தனித்துவமான குரலாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய திரைப்படமான “கான் சிட்டி” மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். இப்படத்தின் அறுக நிகழ்வில் அத்ஜூன் தாஸ் பேசியதாவது: “இது குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான, மகிழ்ச்சியான திரைப்படம். கதையைப் பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கை, அதில் நடைபெறும் உணர்வுபூர்வமான தருணங்கள், நகைச்சுவை மற்றும் சந்தோஷமான அனுபவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்,” என்றார்.*******
சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய தனது திருமணச் செய்திகள் குறித்த கேள்விக்கும் அவர் விளக்கம் அளித்தார். “எங்கிருந்து அந்த செய்தி வந்தது என்று எனக்கே தெரியவில்லை. வீட்டிலிருந்தும், உறவினர்களிடமிருந்தும் தொடர்ந்து அதைப் பற்றி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் உண்மையில் நிச்சயதார்த்தமோ, திருமண ஏற்பாடுகளோ எதுவும் இல்லை,” என்று சிரித்தபடி மறுத்தார்.
ரசிகர்கள் தன்னிடம் அதிகமாக கேட்கும் விஷயம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “திரையரங்குகளுக்கு சென்று நேரடியாக ரசிகர்களை சந்திக்கும் போது குறிப்பாக குடும்ப ரசிகர்களும், மூத்த பெண்களும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்களில் அதிகம் நடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதனால்தான் தற்போது குடும்ப ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலான கதைகளையும் அதிகமாகத் தேர்வு செய்து வருகிறேன்,” என்றார்.

