“அங்கீகாரம்” திரைப்பட விமர்சனம்

ஸ்வஸ்திக் நிறுவனம் தயாரிப்பில்  ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில்,  கே.ஜெ.ஆர்., விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் ஆகியோரது நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “அங்கீகாரம்”.  சென்னை கூவத்து கரையோரம் குடியிருக்கும் துப்புறவு தொழிலாளியின் மகன், தடகள ஓட்டப்பந்தய வீரராக திகழ்கிறார். வறுமைக்கோட்டிற்கு  கீழ்வாழும் இவர் உலக விளையாட்டரங்கப் போட்டியில் கலந்து கொண்டு தனது வாழ்வாதாரத்தை உயர்த்த கடும் பயிற்சி எடுத்து காமன் வெல்த் போட்டிக்கு தகுதி பெறுகிறார்.  ஆனால் இவரை காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் மறுக்கிறது. அதனால் ஆணையத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். தகுதி பெற்ற இவரை ஏன் இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் மறுக்கிறது? நீதிமன்றத்தில் இவருக்கு நியாயம் கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் கதை.

வறுமைக் கோட்டுக்கு கீழ்வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை படம்பிடித்து காட்டியுள்ளார் இயக்குநர் ஜே.பி. தென்பாதியான். ஏழைகளை ஏழைகளாவே வாழ்ந்துமடிய, வசதி படைத்தவர்களின் செய்யும் சூழ்ச்சிகள் இன்றளவும் நடக்கத்த்கான் செய்கிறது. வழுக்குப்பாறையில் நடந்து சென்றுதான் ஏழைகள் வாழ்வின் உச்சத்தை தொட  முடியும். இதில் விளையாட்டு வீரராக நடித்திருக்கும் கே.ஜெ.ஆர். மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். அரசியல்வாதிகளுடனும் ஆணையத்தின் நிர்வாகிகளுடனும் அவர் போராடும் காட்சிகள் மிரம்பிக்க வைக்கின்றன. ஏழைகள் ஏழைகளாகவே வாழ்ந்துதான் சாகவேண்டுமா? கூழ் குடிப்பவன் பீட்சா சாப்பிடவே கூடாதா? என்ற கேள்விகள் படம் பார்க்கும் பார்வையாளர்களின்

மனதில் தோன்றி மறைகிறது. படத்தின் பின்பாதி நீதிமன்ற காட்சிகளால் பிரகாசிக்கின்றன.. அரசு வக்கறிஞரின் குற்றச்சாட்டுகளுக்கு விளயாட்டு வீரராகவே பதிலடி கொடுக்கும் கே.ஜெ.ஆரின் நடிப்பு அபாரம். கைத்தட்ட வைக்கிறது. விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் ஆகியோரின் நடிப்பில் குற்றம்காண முடியவில்லை. நீதி தூங்கும்வரைதான் வசதி படைத்தவர்கள் சிரிக்க முடியும். நீதி விழித்க்துக் கொள்ளும்போதுதான் ஏழைகளின் வாழ்க்கை விடியும் என்பதை இயக்குநர் அழகாக இப்படத்தின் மூலம் சொக்கிறார்.