சுப்ரியா மேனன், முகேஷ் ஆர். மேத்தா, சி.வி. சாரதி ஆகியோரின் தயாரிப்பில், நிஷாம் பஷீர் இயக்கத்தில் , பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து, ஹக்கிம் ஷாஜகான், அசோகன், விஜயராகவன், மதுபால், சங்கர் ராமகிருஷ்ணன், நக்ஷத்ரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஐ நோபடி”. ஒரு வங்கியில் கைத்துப்பாக்கியுடன் நுழைகிறார் பிரிதிவிராஜ். அந்த வங்கியில் மூன்று முகமூடி கொள்ளைக் காரர்கள் ரூ.17 கோடியை கொள்ளையடிகிறார்கள். அப்போது பிரித்திவிராஜின் கையிலிருக்கும் துப்பாக்கியை கொள்ளைக்காரர்கள் பார்க்கிறார்கள். அதனால் அவர்கள் பிரித்திவிராஜையும் கொள்ளையடித்த ரூ 17 கோடி பணத்துடன் காரில் தப்பி செல்கிறார்கள். பிறகு நடுவழியில் பிரத்க்திராஜை இறக்கிவிட்டுவிட்டு அந்த மூன்று கொள்ளையர்களும் காரில் தம்பி செல்கிறார்கள். ஆனால் அந்த கார் விபத்தில் சிக்குகிறது. அந்த விபத்தில் மூன்று கொள்ளையர்களும் மரணமடைகிறார்கள். விபத்து நடந்த காரில் கொள்ளையர்களின் உடல்தான் கிடக்கிறதேதவிர ரூ.17 கோடியை காணவில்லை. போலீசாருக்கு அந்த பணத்தை பிரிதிவிராஜ்தான் எடுத்திருப்பார் என்று சந்தேகப்படுகிறார்கள். அந்த பணத்தை பிரித்த்ஜிவிராஜ்தான் எடுத்தாரா? அந்த் பணம் எங்கே? என்பதுதான் மீதிக்கதை.
இது ஒரு மலையாள திரைப்படம். தமிழிலும் வெளிவந்திருக்கிறது. இப்போது வரும் படங்கள் எதிமறை கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கின்றார்கள். படத்தில் கதாநாயகன் உள்ள்பட அனவரும் கெட்டவர்களே. கதாநாயகி, போலீஸ், முதல் அமைச்சர் என அனைவரும் கெட்டவர்கதான். இப்படத்தின் மையக் கருத்தே பணம்தான். அதை எப்படி அடைகிறார்கள் என்பதை விறுவிறுப்புடன் கொஞ்சம்கூட சலிப்பு தட்டாமல் படத்தை விரைந்து ஓட்டியிருக்கிறார் இயக்குநர் நிஷாம் பஷீர். பிரித்திவிராஜ் தன் உயிரை பணையம் வைத்க்த்கு நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் சணடை போடுபவர்கள் அனைவரும் சமமாக அடி வாங்குகிறார்கள். அதிக அடி வாங்குவது பிரித்திவிராஜ்தான். அவரது மனைவியாக நடித்திருக்கும் பார்வதி, வங்கி மோலாளரிடம் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை வெளிப்படையாகவே சொல்கிறார். ஒழிவு மறைவு இல்லாத வெளிப்படையான வாழ்க்கையை இப்படத்தில் காணமுடியும். ஆகச் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கும் பிரித்திவிராஜ் பாராட்டுக்குறியவர். பார்வதி பார்வையாளர்களின் மனதில் தங்கிவிடுகிறார். பின்னணி இசையால் படம் மிளிர்கிறது. பார்வையாளர்களின் மன ஓட்டத்தைவிட படத்தின் ஓட்டம் சூடுபிடிக்கிறது. எதிர்மறையான கருத்தைத்தவிர படபிடிப்பில் குறைவொன்றுமில்லை.

