கனடா “உதயன்” பத்திரிகை அலுவலகத்திற்கு வருகை தந்த மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரனை வரவேற்று, தான் எழுதிய “இதுவரை” என்ற நூலை பரிசளித்தார் “உதயன்” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம்

கடந்த 26-06-2026 அன்று கனடாவில் நடைபெற்ற நடனச் செல்வி நிஷ்கிதா கோகுலராஜ் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை நடத்துவதற்காக கனடாவிற்கு வருகை தந்திருந்த  கொழும்பு- அபிநயஷேஸ்த்திரா நடனப் பள்ளியின் இயக்குனரும் குருவும் அரங்கேற்றம் கண்ட நிஷ்கிதா கோகுலராஜின் குருவுமாகிய ‘கலாசூரி’திவ்யா சுஜேன் அவர்களும் உலகக் கவி- மகாகவி சுப்ரமணிய பாரதியின் ‘கொள்ளுப் பேரனும்’  பன்முகக் கலைஞரும் இலத்திரனியல் பொறியியலாளருமான  ‘கலாநிதி; ‘ஞானபானு’ ராஜ்குமார் பாரதி அவர்களும் மேற்படி அரங்கேற்றத்தை திறம்பட நடத்தி கனடிய பரதநாட்டிய ஆசிரிய ஆசிரியைகள் மற்றும்  நடனப் பிரியர்களின் பாராட்டுக்களைப் பெற்றுச் சென்றுள்ளார்கள்.

மேற்படி இரு கலையுலக வித்தகர்களும் இங்கு தங்கியிருந்த நாட்களில் கனடா உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு நட்புடன் வருகை தந்து பிரதம ஆசிரியர் மற்றும் அன்பர்களோடு உரையாடி மகிழ்ந்தார்கள்.

அத்தருணத்தில் பிரதம ஆசிரியர் அவர்களின் நூலான ‘இதுவரை’பிரதிகளை அவர் ‘கலாசூரி’திவ்யா சுஜேன் அவர்களுக்கும், மகாகவி சுப்ரமணிய பாரதியின் ‘கொள்ளுப் பேரனும்’  பன்முகக் கலைஞரும் இலத்திரனியல் பொறியியலாளருமான  ‘கலாநிதி; ‘ஞானபானு’ ராஜ்குமார் பாரதி அவர்களுக்கும்  வழங்கினார்.