மாநகராட்சி புதிய கட்டிடத்தை ஆய்வு செய்த ஆணையர்

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் புதியதாக கட்டபட்டு வரும் மாநகராட்சி அலுவலக வளாக கட்டிடத்தை ஆணையர் சீ.பாலச்சந்தர் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சானடோரியம் பகுதியில் மத்திய நிதிக்குழு மானியம், மாநில நிதிக்குழு மற்றும் சிறப்பு நிதியின் கீழ்  ரூ.43.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி அலுவலக வளாக கட்டிடப்பணிகளை பார்வையிட்டு பணிகளை தரமாகவும்,துரிதமாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் இந்த கட்டிடமானது மூன்று அடுக்குகளாக கட்டபட்டு வருகிறது. தரைதளமானது 3908 சதுர.மீ பரப்பளவில் வாகன நிறுத்ததிற்காக ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 90கார்கள் மற்றும் 355 இருச்சக்கர வாகனங்கள் நிறுத்தும் வண்ணம் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. முதல் தளமானது 2734 சதுர.மீ பரப்பளவில் மேயர் மற்றும் துணை மேயர் உள்ளிட்டோருக்கான அலுவலகங்களுக்கு வடிவமைக்கபட்டு உள்ளது.இரண்டாம் தளம் 3296 சதுர.மீ பரப்பளவில் ஆணையர் மற்றும் துணை ஆணையர் உள்ளிட்டோருக்கான அலுவலகங்களுக்கு வடிவமைக்கபட்டு உள்ளது. மேலும் மூன்றாம் தளமானது 2503 சதுர.மீ  பரப்பளவில் தலைமைப் பொறியாளர், செயற் பொறியாளர் மற்றும் உணவகத்திற்காக வடிவமைக்கபட்டு உள்ளது.  

இந்த திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொள்ளும்பொழுது  ஆணையர் பணிபுரியும் பணியாளர்களை பாதுகாப்பாகவும், கவனத்துடன் பணியாற்றுமாறு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது, துணை ஆணையர் டி.நாராயணன், தலைமை பொறியாளர் பி.வி.ஸ்ரீனிவாசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.