டவுண் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க, *ரெட் ஜெயன்ட் மூவிஸ்* இப்படத்தை வெளியிடவுள்ளது. இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் அட்லீ கலந்துகொண்டு சிறப்பித்தோடு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் நடிகர் அதர்வா பேசியதாவது: “இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. தயாரிப்பாளராக ஆகாஷ் ஏற்கனவே பல படங்களை வழங்கியிருந்தாலும், இயக்குநராக அவர் உருவாக்கிய முதல் திரைப்படம் என்பதால் இது அவருக்கும் மிகவும் முக்கியமான படைப்பு. அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பகத் பாசில், தமன் என நடிகர் பட்டாளம் படத்தில் உள்ளது அதற்கு காரணம் ஆகாஷ் தான். இறுதியாக, இது அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு மனநிறைவு தரும் திரைப்படமாக உருவாகியுள்ளது.” என்றார்.********
இயக்குநர் அட்லீ பேசியதாவது: ஆகாஷ் எனக்கு தம்பி போன்றவர். எனக்காக அவர் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இந்தக் கதையை நானே தயாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இறுதியில் அவரே தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார். அவர் செய்திருக்கும் பணி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்தத் திரைப்படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. இது அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று நம்புகிறேன். அதர்வாவின் மிகப்பெரிய ரசிகர்களில் நானும் ஒருவன். ‘இதயம் முரளி’ திரைப்படத்தை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வருகிறேன். இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது: ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காதலைக் கொண்டாடும் ஒரு அழகான திரைப்படமாக ‘இதயம் முரளி’ உருவாகியுள்ளது. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. எங்கள் படத்திற்குத் தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்கி வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

