சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச்.வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!* இந்தப் படத்தை நடிகர், எழுத்தாளர் ராஜு ஜெயமோகன் இயக்குகிறார். அவர் இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். டார்க் காமெடி, ஆழமான உணர்வுகள், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் இயல்பான கிராமத்து மண்வாசனை என வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக ’அல்மோஸ்ட் நல்லவன்’ உருவாகிறது. ’அல்மோஸ்ட்’ என்ற வார்த்தைக்கு சந்தேகம், தெளிவின்மை என பல அர்த்தங்கள் உண்டு. ‘அல்மோஸ்ட் தேர்…’, ’அல்மோஸ்ட் டன்…’ போன்ற சொற்களைப் போலவே, இப்படத்தின் கதையிலும் அந்த வார்த்தைக்கு முக்கிய இடம் உண்டு.********
நடிகரும் இயக்குநருமான ராஜு ஜெயமோகன் பகிர்ந்து கொண்டதாவது. “‘அல்மோஸ்ட் நல்லவன்’ என்ற தலைப்பே இந்தப் படத்தின் மையக் கருத்தை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்ல குணங்களும், குறைகளும் இருக்கின்றன. இன்றைய டிஜிட்டல் உலகில் பலர் இரண்டு வாழ்க்கைகளை வாழ்கிறார்கள். ஒன்று அவர்களின் உண்மையான வாழ்க்கை. மற்றொன்று, சமூக வலைதளங்களில் அவர்கள் உருவாக்கிக் கொள்ளும் முகம். சில நேரங்களில் அந்த டிஜிட்டல் அடையாளமே தங்களின் உண்மையான முகம் என்று கூட நம்பத் தொடங்குகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்கள்தான் இந்தக் கதை. இந்தப் படத்தில் சத்யராஜ் சார், துஷாரா விஜயன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இமான் அண்ணாச்சி, பிக்பாஸ் புகழ் தாமரை செல்வி, நாடகக் கலைஞர் யாழினி மற்றும் பிரிதம் சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.

