‘அன்பே டயானா’ திரைப்படத்தின் காணொளி வெளியீடு

‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’  மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் காணொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்தார்கள்.  இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சமுத்திரக்கனி, சசிகுமார் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.  நடிகை ரோஜா பேசியதாவது: “இந்தப் படத்தின் கதையை கேட்டவுடனே இது ஒரு அழகான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை உணர்ந்தேன். குடும்ப பாசம், உறவுகள், காதல், உணர்வுகள் என அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்த ஒரு நல்ல படமாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது. எனக்கு ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து செட்டிலான பெண் வேடம், என் நிஜ வாழ்க்கைப் பாத்திரம் போலவே இருந்தது. குறிப்பாக படத்தின் உச்சக்கட்ட காட்சி அனைவரின் மனதையும் தொடும். அது மிகவும் வித்தியாசமாகவும், நிறைவான அனுபவத்தை தரக்கூடியதாகவும் இருக்கும். அந்தக் காட்சி ரசிகர்களை நிச்சயம் கவரும். என்றார்.