திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் ‘ஓ ! சுகுமாரி’ படத்தின் காணொளி வெள்ளோட்டம்

காணொளி மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘ஓ! சுகுமாரி’ – திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முதன் முதலாக திரையில் ஒன்றிணைந்திருக்கும் இந்த திரைப்படம் – காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியின் அழகிய அம்சங்கள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற உறுதியை அளிக்கிறது. பரத் தர்ஷன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்திருக்கிறார்.********

நடிகர்கள் : திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், முரளிதர் கௌட், விஷ்ணு. ஒய், ஜான்சி, ஆமனி, ஆனந்த் கோட்டா ஜெயராம் .

தொழில்நுட்ப குழு : தயாரிப்பாளர் : மகேஸ்வரா ரெட்டி மூலி இயக்குநர் :  பரத் தர்ஷன் ஒளிப்பதிவு : சி ஹெச் குஷேந்தர் இசை : பரத் மஞ்சிராஜு கலை இயக்குநர்: திருமலா எம் திருப்பதி படத்தொகுப்பு : ஸ்ரீ வர பிரசாத் மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங் : ஹேஷ்டாக் மீடியா