‘பள்ளிச்சட்டம்பி’ ஜூலை 24 முதல் சோனி லைவ் தளத்தில் வெளியாகிறது

திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற டோவினோ தாமஸின் ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம், வரும் ஜூலை 24 முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1958-ஆம் ஆண்டு கேரளாவின் பின்னணியில் இக்கதை நகர்கிறது. ‘காணியார்’ என்ற மலைக்கிராமத்தில் அரசியல், மதம் மற்றும் அதிகாரம் எப்படி மோதிக்கொள்கிறது என்பதைப் படம் காட்டுகிறது. இதில் டோவினோ தாமஸ், ‘கிருஷ்ணா பிள்ளை’ என்ற ஊர்சுற்றும் ரௌடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் எப்படி அந்த ஊரின் தேவாலயத்தைக் காக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’யாக மாறுகிறார்? அங்கு நடக்கும் கொள்கை மோதல்களில் எப்படி மாட்டிக்கொள்கிறார்? என்பதே கதை.******

முன்னணி கதாபாத்திரங்கள்: டோவினோ தாமஸ், காயாடு லோஹர். முக்கிய வேடங்களில்: விஜயராகவன், சித்திக், பாபுராஜ், டி.ஜி. ரவி மற்றும் பலர். சிறப்புத் தோற்றம்: நடிகர் பிருத்விராஜ். டோவினோ தாமஸ் பகிர்ந்துகொண்டது: “மாற்றம் மற்றும் தைரியத்தைப் பேசும் ஒரு கதை இது. கேரளா வரலாற்றின் முக்கியப் பின்னணியில் இந்த படம் உருவாகியுள்ளது. எனது பல படங்கள் Sony LIV-ல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த படமும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைக் கவரும் என்று நம்புகிறேன்.”

தயாரிப்பு குழு: தயாரிப்பு: நௌஃபல் அகமது, பிரிஜேஷ் முகமது மற்றும் சிசிசி பிரதர்ஸ். இசை: ஜேக்ஸ் பிஜாய். ஒளிப்பதிவு:  டிஜோ டோமி. மறக்காமல் வரும் ஜூலை 24, 2026 முதல் Sony LIV தளத்தில் இந்த அதிரடியான, உணர்வுபூர்வமான காவியத்தைக் கண்டு மகிழுங்கள்!