மருத்துவத்தை கூறும் திரைப்படம் “செய் செய்யாதே”.

ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “செய் செய்யாதே” திரைப்படத்தை அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பி.எஸ்.சி. நர்சிங் பட்டதாரி சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை மருத்துவரும் திரைப்பட இயக்குநருமான டாக்டர். எஸ். ராஜா கவனித்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்காவில் மருத்துவத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தை திரைப்பட மொழியுடன் இணைத்து மருத்துவத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சிந்திக்க வைக்கும் படைப்பாக இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் அரசியல் தலைவர் ஹெச்.ராஜா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகனாக குரு விஜய், கதாநாயகிகளாக டபிதா குணரத்தினே மற்றும் மோனிகா ப்ரீத்தி வி, குழந்தை நட்சத்திரம் பிரதீக்ஷா மனோ பிரஷாந்த், படத்தில் குரு விஜயின் தந்தையாக டாக்டர். எஸ். ராஜா தோன்றுகிறார். அவருக்கு தாயாராக தர்ஷினி ரெட்டி நடித்துள்ளார்கள்*********

இந்த திரைப்படம் மருத்துவர்களைப் பற்றிய கதை மட்டுமல்ல. ஒரு நோயாளியின் வாழ்க்கையைச் சுற்றி இயங்கும் முழு மருத்துவ அமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமூகப் படைப்பாகவும் அமைகிறது. நோயாளி, மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அரசு சுகாதார அமைப்பு என ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஒரு உயிரைக் காப்பாற்றுவதில் எவ்வளவு முக்கியமானது என்பதை படம் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்கிறது.

மருத்துவம் என்பது சிகிச்சை மட்டுமல்ல. அது மனிதநேயம், நம்பிக்கை, பொறுப்பு, கருணை மற்றும் குழு ஒருங்கிணைப்பின் வெளிப்பாடு என்பதையும் திரைப்படம் வலியுறுத்துகிறது. படத்தின் காட்சிகள் அனைத்தும் மிகவும் பிரம்மாண்டமாகவும் இயல்பாகவும் படமாக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் திருநெல்வேலி, கொடைக்கானல், மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இயற்கை எழில் கொஞ்சும் வட்டாரங்களில் முழுவீச்சில் படமாக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. மேலும் இத்திரைப்படம் ₹4 கோடி பட்ஜெட்டில்  மிகத் தரமான தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்போடு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு- ராம்நாடு. வாசு பி படத்தொகுப்பு: ராஜா முகமது (தேசிய விருது பெற்றவர்) மக்கள் தொடர்பு – சிவக்குமார்