‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ அக்.2ல் வெளியாகிறது

’த்ரிஷ்யம்’ திரைப்படத் தொடரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ’த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ படத்தின் முன்னோட்டக்  காணொளி  வெளியிடப் பட்டுள்ளது. அபிஷேக் பதக் இயக்கியிருக்கும் ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ திரைப்படத்தில் அஜய் தேவ்கன், தபு, ஸ்ரியா சரண், ரஜத் கபூர், ஜெய்தீப் அஹ்லாவத், பிரகாஷ் ராஜ், கமலேஷ் சாவந்த், இஷிதா தத்தா மற்றும் மிருணாள் ஜாதவ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். காணொளி வெளியீட்டில்  இதில் அஜய் தேவ்கன், தபு, ஸ்ரியா சரண், ரஜத் கபூர், ஜெய்தீப் அஹ்லாவத் மற்றும் மிருணாள் ஜாதவ் ஆகிய நடிகர்களுடன், இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் அபிஷேக் பதக், ஜியோஸ்டாரின் இந்தி மற்றும் ஆங்கில பொழுதுபோக்கு பிரிவின் தலைவர் மற்றும் தயாரிப்பாளர் அலோக் ஜெயின், ஸ்டார் ஸ்டுடியோ18 நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளர் அஜித் அந்தாரே மற்றும் தயாரிப்பாளர் குமார் மங்கத் ஆகியோர் கலந்து கொண்டனர்.******

ஸ்டார் ஸ்டுடியோ18 வழங்கும் இப்படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அபிஷேக் பதக், ஆமில் கீயான் கான் மற்றும் பர்வீஸ் ஷேக் ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர். அலோக் ஜெயின், அஜித் அந்தாரே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோர் தயாரித்துள்ள ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ திரைப்படம், அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.