காவல்த்துறை காவலாராக நடிக்கும் சசிகுமார்

பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ எனும்  அறிமுக நிகழ்வு நடை பெற்றது. இந்நிகழ்வில் சசிகுமார், யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பாளர்கள் புஷ்கர்- காயத்ரி, இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் மற்றும் பிரைம் வீடியோ உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகர் சசிகுமார் பேசுகையில், ”வதந்தி 2 கதையை இயக்குநர் மதுரையில்  என்னை சந்தித்து சொன்னார். தலைப்பை கேட்டவுடன் நான் தான் மணி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறேன் என்று நினைத்திருந்தேன். மதுரை என்பதால் மணி- குட்டி புலி- என ரௌடியாகத்தான் யோசிப்பார்கள். நானும் இதுவரை 30 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். யாரும் என்னை போலீசாக நடிக்க வைக்க வேண்டும் என யோசிக்கவில்லை. இயக்குநரிடம் இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்ப கேட்டேன். நான் மணி கதாபாத்திரத்தில் நடிக்கிறேனா? அல்லது போலீஸ் மூஸி ராசா கதாபாத்திரத்தில் நடிக்கிறனா? என்று கேட்டேன். அவர் தான் நீங்கள் போலீசாக மூஸா ராசா கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் என்றார். மதுரை பின்னணியில் என்னை ரவுடியாக இல்லாமல் போலீசாக நினைத்து கதையை எழுதியதால் அந்த கதையை முழுவதுமாக கேட்டேன். இந்த கதாபாத்திரம் இவ்வளவு சிறப்பாக மெருகேறி இருக்கிறது என்றால்… அதற்கு இயக்குநர் ஆண்ட்ரூஸின் கடும் உழைப்புதான் காரணம். *******

போலீஸ் என்றவுடன் அந்த ட்ரெஸ்ஸை போட்டுக் கொண்டு கம்பீரமாக நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இயக்குநர் அப்படி எல்லாம் நடிக்க கூடாது. இயல்பாக இருக்க வேண்டும் என்றார்.  அந்தக் கதாபாத்திரம்-  மதுரையில் இருக்கும் ஒரு சாதாரண போலீஸ் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பார். அவர் சொன்ன கதையும் எனக்கு பிடித்திருந்தது. ஒரு நிரபராதியை காப்பாற்ற போலீஸ் போராடும் கதை. போலீஸ் பாயிண்ட் ஆஃப் வ்யூவில் தான் வதந்தி சீசன் 2 வின் கதை நகரும்.

இதுவரை வெளியான இன்வெஸ்டிகேட்டட் திரில்லர் ஜானரிலான கதைகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற பரபரப்பு தான் இருக்கும். ஆனால் இந்த தொடரில் பாவம் ஹீரோ ..‌! போலீஸ் எப்படியாவது குற்றவாளியை கண்டுபிடித்து, இவனை விடுவித்து விட வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும்.