உலகில் யாரும் செய்திடாத முயற்சியாக, சங்ககிரி ராஜ்குமாரின் பெரும் முயற்சியில் *ஒன் மேன்* திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை மனிதனாகச் செய்து முடித்திருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இணைந்து பணியாற்றும் நிலையில், இத்தனை பணிகளையும் தனி ஒருவராகச் செய்து முடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தில் இடம்பெறும் அத்தனை கதாபாத்திரங்களிலும் சங்ககிரி ராஜ்குமாரே நடித்திருந்தாலும், படத்தைப் பார்க்கும்போது ஒவ்வொருவரும் தனித்தனி கதாபாத்திரங்களாகவே மனதில் தோன்றுகிறார்கள்.******
பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் போலவே, ஒரு தனி மனிதனாகவும், தமிழனாகவும் தான் செய்த இந்தப் பெரும் சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும், வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி *ONE MAN* திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

