ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா

இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது  நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் முரளி ஷர்மா, விரைவில் வெளியாகவுள்ள ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் நடிக்கிறார். நடிகர் முரளி ஷர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தில் அவர் இணைந்திருப்பதை படக்குழு அறிவித்துள்ளது. ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ரதீஷ் வேகா எழுதி இயக்குகிறார். இப்படத்தில்  முரளி ஷர்மா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ஜெயசூர்யாவுடன் ரித்திகா சிங், காவ்யா ஷெட்டி, ஆன்சன் பால், நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, வினய் ராய், சித்திக், சாய் குமார் மற்றும் சிராஜுதீன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தை குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஜாபி ஜார்ஜ் தாடதில் தயாரிக்கிறார்******

முரளி ஷர்மா தனது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வேளையில், ‘ஆபரேஷன் டிரால்’ படக்குழு, அவருக்கு தங்களது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு அவரது சிறப்பான நடிப்பை கொண்டு சேர்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.