உலக தற்காப்பு கலைகளை உள்ளடக்கிய சிலம்ப விளையாட்டிற்கு அங்கீகாரம் இல்லை என்பதா? கேள்விக்கனை தொடுக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் க.தேசிங்.M A.M L.

கடந்த 09.08 2026. ஞாயிற்றுக்கிழமை திருப்போரூர் ஆறுபடைவீடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் லிங்கம் சிம்பம் பயிற்சி பள்ளியில் பல்வேறு இடங்களில் சிலம்பம் பயிலும்  மாணவ, மாணவிகளுக்கு  திறனறிவு தேர்வு மற்றும் பட்டயச்சான்று வழங்கும் விழா 10-வது  ஆண்டாக நடைபெற்றது.

   சுமார் 280க்கும் மேற்பட்ட பள்ளி ,கல்லூரி குழந்தைகளுடன்,சுமார் 35,வயதிற்கு மேற்பட்டவர்களும் இத்தேர்வில் கலந்து கொண்டனர் என்பதை பார்க்கும் போது இச் சிலம்பக்கலையை யாரலும் அழிக்க முடியாது என்பது திட்டவட்டமாக தெரிந்தது.காலை 9.00மணிக்கு எழுத்துத்தேர்வு துவங்கியது.அதற்குபிறகு செய்முறை தேர்வுகள் துவங்கின.

செய்முறை தேர்வு என்பது அடிமுறை விளையாட்டு, சிலம்பம் சுழற்றுதலில் போர்கலை சிலம்பம்,  அலங்கார சிலம்பம் இரு கை சிலம்பம், வாள் வீச்சு,இரு கை  வாள்வீச்சு சுருள்வாள்வீச்சு,குறுவாள் வீச்சு,மான் கம்பு விளையாட்டு, ஈட்டி சுழற்றுதல் ,கத்தி கேடயம் ,கோடாரி கேடயம் வீச்சு , வாய் மொழித் தேர்வு போன்றவைகளை உள்ளடக்கியதாக இருந்தது.  தேர்வர்கள் லாவகமாக ஆயுதங்களை செய்து காட்டியது  நம்மை பிரமிக்க வைத்தது.

  மாலை 4.00மணியளவில்  பட்டயச்சான்று வழங்கும் விழா துவங்கியது.இதில்

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற  மூத்த வழக்கறிஞரும் லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் ஆலோசகருமான  க.தேசிங்.M A.M L.

அவர்கள் தனது வாழ்த்துரையில் உலகத்தில் உள்ள தற்காப்பு கலைகளை உள்ளடக்கியதாக உள்ள சிலம்ப விளையாட்டிற்கு  அரசாங்க அங்கீகாரம் இல்லை என்பதை நாம் அறியும் போது  வேதனையானதாக உள்ளது.அனைத்து தகுதிகளும் ( potioncial) உள்ள இந்த விளையாட்டினை அரசுகள் அங்கீகரிக்காமல்  வேறு  விளையாட்டுக்களை அங்கீகாரம் செய்வது ஏற்புடையது அல்ல என சாடினார்.விரைவில் தற்போதைய  தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து சிலம்ப விளையாட்டிற்கு அங்கீகாரம் கோரிட உள்ளதாக தெரிவித்தார்.

    லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் இயக்குனரும்,ஸ்ரீ ஐயப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதன்மை முதல்வருமான  R. சீனிவாசன்.M SC. B ED

அவர்கள் தனது வாழ்த்துரை யில்  சிலம்ப விளையாட்டு என்பது மற்ற விளையாட்டுக்கள் போன்றது அல்ல.உடலையும் ,உள்ளத்தையும் இணைத்திடும்  பண்பு கொண்டது.இதனை கற்கும் குழந்தைகள் தவறான பாதைக்கு செல்வதில்லை.பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் சிலம்பத்தை மேலும்,மேலும் கற்றிட அனுமதிக்க வேண்டும் என்றார்.

தண்டலம் ஊராட்சிமன்றத்தின் செயலாளர்J.கோபால கிருஷ்ணன் அவர்கள் தனது வாழ்த்துரையில்  எங்களது தண்டலம் பகுதிக்கு ஆசான் தனபால் அவர்கள் கிடைத்தது எங்களது பாக்கியம்  என்றார். லிங்கம் சிலம்பம் பயிற்சி பட்டறையில் உருவாகிடும் குழந்தைகள் எவ்வித தீய பழக்கங்களுக்கும்  உள்ளாகமல்  இருப்பதை கண்டு மகிழ்கிறோம் என்றார்.இயற்கை ஆர்வலர் K குமரவேல் தனது வாழ்த்துரையில் மிகவும் சிறப்பான  சிலம்ப பயிற்சியினை லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி அளித்து வருவதை கண்டு நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி பழையன மாறாமல் புதியன புகுத்திடும் முன்னெடுப்பை செய்து வருகிறது என்றார். லிங்கம் சிலம்பம் பயிற்சிபள்ளியின் நிறுவனர் க.தனபால் அவர்கள் தனது வாழ்த்துரையில் லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி தனது 50′.-வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடி வருகின்றோம். இன்று பள்ளியாக உள்ளது நாளை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அந்த  முயற்சி வெற்றி பெற இங்கே வருகை தந்துள்ள அனைவரும்  ஆதரவு தரவேண்டும்  என்றார்.