சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘லவ்’ தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிறது.*******
இந்நிகழ்வினில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ் பேசியதாவது.
“நெட்ஃப்ளிக்ஸின் முதல் தமிழ் காதல் டிராமா தொடராக ‘#Love’ உருவாகியுள்ளது. தென்னிந்தியக் கதைகளில் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ் படைப்புகளில் வித்தியாசமான கதைக்களங்கள், தனித்துவமான குரல்கள் மற்றும் புதிய அணுகுமுறைகளை வழங்க விரும்புகிறோம். அந்த வகையில் ‘#Love’ காதல் கதையை நவீனமான மற்றும் விளையாட்டுத்தனமான பார்வையில் சொல்லும் படைப்பாக அமைந்துள்ளது.
‘#Love’ தொடரில் இரண்டு போட்டியாளர்களான டேட்டிங் ஆப் நிறுவனர்கள் இடம்பெறுகின்றனர். ஒருவர் காதல் என்பது பொருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது என நம்புகிறார்; மற்றொருவர் கெமிஸ்ட்ரிதான் முக்கியம் என்கிறார். தங்களது கருத்து சரி என்பதை நிரூபிக்க இருவரும் போட்டியில் இறங்கும் நிலையில், காதல் அவர்களது திட்டங்களையே மாற்றுகிறது. டேட்டிங் ஆப்களை பயன்படுத்தியிருக்கிறோமா இல்லையா என்பதைத் தாண்டி, காதல் குறித்த நம்முடைய எண்ணங்களை சில நேரங்களில் காதலே மாற்றிவிடும் என்பதை இந்தத் தொடர் பேசுகிறது.
இந்தத் தொடரை உருவாக்கிய இயக்குநர் பாலாஜி மோகன், அன்றாட உறவுகளில் இருக்கும் உண்மையான விஷயங்களை தனக்கே உரிய நகைச்சுவையான பார்வையில் சொல்லும் திறமை கொண்டவர்.
ஷோ-ரன்னரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், ஆரம்பம் முதலே தெளிவான பார்வையுடன் ‘#Love’ தொடரின் உலகத்தை உருவாக்கியுள்ளார். எழுத்தாளர் நிர்மல் வில்லியம்ஸ், இணை எழுத்தாளர்கள் ஷரதா சுப்ரமணியன், ஸ்வேதா சக்ரவர்த்தி, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், எடிட்டர்கள் சாய் முத்துராமன், சிவா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

