குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரிப்பில்
ஹிப்ஹாப் தமிழா இயக்கத்தில், ஹிப்ஹாப் ஆதி தமிழா, சைத்ரா ஜே ஆச்சார், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், ஹர்ஷத் கான், கருணாஸ் நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன. ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மீசையை முறுக்கு 2” திரைப்படம். ராயபுரத்தில் கானா பாடும் தாஸ் தனது இசையின் மூலம் சாதித்து மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார். அங்கிருந்து அப்படியே தற்காலத்திற்கு வந்தால் மிகப்பெரிய தனியிசைக் கலைஞனாகும் ஆசையுடன் முயற்சித்து வரும் ஆதி கெடிகா சர்மாவை சந்திக்கிறார். அவர் மீது ஆதிக்கு காதல் ஏற்பட இசைக்குடும்பத்தைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளருடன் மோதல் உண்டாகிறது. பணம், புகழ், பரம்பரை பலம் கொண்ட இசையமைப்பாளருடன் மோதும் அவர் தனது கனவை அடைந்தாரா? இல்லையா? என்பதே மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் கதை.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கலக்கியிருக்கிறார் ஆதி. இசைக்காக முயற்சிக்கும் இளைஞனிலிருந்து கனவை துரத்தும் இடம் வரை அவரின் தவிப்பு பார்வையாளர்களையும் வந்தடைய மெனக்கெட்டிருக்கிறார். நெபோடிசம் குறித்த விமர்சனங்கள், தன்னம்பிக்கை வசனங்கள் என இரண்டாம் பாதி முழுக்க ஆக்கிரமித்துள்ளது.
தனது தந்தை பாபா பாஸ்கரிடம் கோபம் கொள்வதிலும், அன்பை பரிமாறிக் கொள்வதிலும் நிறைவு செய்திருக்கிறார்.
மூன்று கதாநாயகிகளும் திரைநேரம் குறைவாக இருந்தாலும் அவர்களுக்குண்டான இடங்களை ஆழமாக நிரப்பியுள்ளனர். கெடிகா சர்மாவின் கவர்ச்சி இளைஞர்களை ஈர்க்கும் காந்தம். இவர்களுடன் பாபா பாஸ்கர் மாஸ்டர், கருணாஸ், யோகிபாபு, நாசர், பகவதி, விஜய் வரதராஜ், ஹர்ஸத் கான் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருந்திப் போயுள்ளனர். கலகலப்பாக நகரும் முதல் பாதியும், விறுவிறுப்பாக செல்லும் இரண்டாம் பாதியும் நன்றாக அமைந்திருக்கிறது.
நாசருக்கு கருணாஸ் பின்னனி கொடுத்த இடங்கள் அரங்கை அதிரச் செய்கிறது. இசை குறித்த படம் என்பதால் பாடல்களால் நிரம்பியிருக்கிறது திரைப்படம். முதல் பாதியிலேயே 4 பாடல்கள் அமைந்திருக்கின்றன. கேமரா, சண்டைக்காட்சிகள், படத்தொகுப்பு என அவரவர் தங்களது பணிகளை சரியாக செய்திருப்பது படத்திற்கு உதவியாக அமைந்துள்ளது. இசையில் நடக்கும் ஏற்றத்தாழ்வு பிரச்னைகளும், அதில் கலந்திருக்கும் வாரிசுள்க் அரசியலும் கானாவை கலையாக அங்கீகரிப்பதில் ஏற்படுத்தியிருக்கும் விளைவை தன்னளவில் பேசியிருக்கிறார் ஆதி. படம் ஆரம்பம் முதல் முடியும் சரை பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டாமல் கலகலப்பாக படத்தை இயக்கியுள்ளார்

